மேட்டுப்பாளையம் மாநகராட்சி பள்ளி மாணவிக்கு கூகுள் நிறுவனம் பாராட்டு!

ஏ.டி.எம் மெஷினில் ரூபாய் நோட்டுகள் வருவதைப் போல, காயின்கள் தரும் காயின் வெண்டிங் மிஷினைக் கண்டுப் பிடித்திருக்கிறார் தர்ஷினி.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், மாநகராட்சி பள்ளி மாணவியின் அறிவியல் கண்டுபிடிப்பிற்கு, கூகுள் நிறுவனம் பாராட்டு தெரிவித்து அங்கீகரித்திருக்கிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஈடுபாடு கொண்ட மாணவர்களின் சிந்தனைத் திறனை ஊக்குவிக்கும் வகையில், கூகுள் நிறுவனம் அவ்வப்போது போட்டிகளை நடத்தும். கூகுளின் இந்த ஆன்லைன் தேர்வில், எந்தப் பகுதியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம்.

மேட்டுப்பாளையம் மாநகராட்சி பள்ளியில், 8-ம் வகுப்பு படிக்கும் தர்ஷினியின் அறிவியல் ஆர்வத்தைப் புரிந்துக் கொண்ட, ஆசிரியர் சரவணன், அவரை கடந்த டிசம்பரில் நடந்த கூகுளின் அறிவியல் திறனாய்வு போட்டியில் கலந்துக் கொள்ள ஊக்குவித்திருக்கிறார்.

ஏ.டி.எம் மெஷினில் ரூபாய் நோட்டுகள் வருவதைப் போல, காயின்கள் தரும் காயின் வெண்டிங் மிஷினைக் கண்டுப் பிடித்திருக்கிறார் தர்ஷினி. இது தொடர்பான வீடியோ பதிவையும் கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பியிருந்தார்.  அதற்கு ஒப்புதல் அளித்து சான்றிதழ் வழங்கிய கூகுள் நிறுவனம், “உங்கள் யோசனையை உலகுக்கு தெரிவித்தமைக்கு நன்றி” என தர்ஷினியைப் பாராட்டியிருக்கிறது.

 

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

Web Title:

Google recognizes tamil nadu class 8 student for her invention

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close