Advertisment

இதை செய்தாலே போதும்! எல்லாருக்கும் உங்களை பிடிக்கும்!

அமெரிக்கன் சைக்காலஜிக்கல் அசோசியேஷன் வெளியிட்ட ஆய்வின்படி, சிரிக்கும் பெண்கள் ஆண்களை மிகவும் கவர்ந்திழுக்கின்றனர்.

author-image
WebDesk
New Update
இதை செய்தாலே போதும்! எல்லாருக்கும் உங்களை பிடிக்கும்!

எல்லாரும் தங்களை அழகாக காட்ட விரும்புகிறார்கள். மேக்கப் போடுவது, தலைக்கு கலரிங் அடிப்பது என தங்களை அழகுப்படுத்தும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஒன்றும் தவறில்லை. சிலர் அதை மேலோட்டமாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள், கொஞ்சம் மேக்கப் அல்லது புதுவகையான ஆடைகளை அணிவதன் மூலம் தன்னம்பிக்கை அதிகரிப்பதாக உணர்கின்றனர்.

Advertisment

அறிவியல் ஆய்வின்படி, உங்களை மிகவும் வசீகரமாக மாற்றும் விஷயங்கள் இதோ!

புன்னகை செய்யுங்கள்!

அமெரிக்கன் சைக்காலஜிக்கல் அசோசியேஷன் வெளியிட்ட ஆய்வின்படி, சிரிக்கும் பெண்கள் ஆண்களை மிகவும் கவர்ந்திழுக்கின்றனர்.  மேலும் அடிக்கடி சிரிப்பவர்கள் தங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். புன்னகைக்கு எந்த மொழியும் கிடையாது. நீங்கள் புதிதாக ஒருவரிடம் பழகும்போது புன்னகை செய்து ஆரம்பிப்பதன் மூலம் அவரின் அன்பையும், நன்மதிப்பையும் பெறலாம்.

கூந்தல் ஆரோக்கியம் முக்கியம்!

இரண்டாவதாக  உங்கள் தலைமுடியை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் அடிப்படை சுகாதரத்துடன் வைத்திருப்பது பார்ப்பவர்களை மிகவும் கவரும். மேலும் சுத்தமான கூந்தல் உங்களுக்கு அதிக நம்பிக்கையை  அளிக்கிறது. இதற்காக நீங்கள் அதிக மெனக்கெட வேண்டியதில்லை. தினசரி தலைக்கு குளிப்பதுடன் உங்கள் முகத்துக்கு ஏற்ற சிகையலங்காரத்தை செய்தாலே போதும்.

உங்க சருமத்தை கவனிங்க!

உங்கள் தலைமுடியை எப்படி சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறீர்களோ அதைபோலவே உங்கள் சருமத்தையும் ஆரோக்கியமாக பாரமரிக்க வேண்டும்.  உங்களுக்கு சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சருமம் இருப்பது உங்களின்  நல்ல ஆரோக்கியத்தைக் குறிக்கிறது மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதற்காக உங்கள் தோல் பராமரிப்புக்காக ஒவ்வொரு நாளும், ஒரு மணிநேரம் செலவிட வேண்டியதில்லை, ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு முறை உங்கள் முகத்தை கழுவுங்கள். அது உங்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க போதுமானது.

மேக்கப் போடுவதில் தவறில்லை!

இயற்கையிலே சரியான முக அமைப்பு உள்ளவர்கள் மிகவும் அழகாக இருக்கின்றனர். ஆனால் நம்மில் பலருக்கு சரியான முக அமைப்பு இல்லை.  இருப்பினும் வெவ்வேறு மேக்கப் நுட்பங்களை பயன்படுத்தி, உங்கள் முக அமைப்பை எளிதாக மாற்றலாம்.

கண் தொடர்பு அவசியம்!

அடுத்தவர்களிடம் பேசும்போது, கண் தொடர்பு அவசியம். கண் தொடர்பு கொள்வது நீங்கள் பேசும் நபருடன் உங்களை இணைக்க உதவும். மற்றும் உங்களை வசிகரமாகவும் காட்டும்.

கொஞ்சம் உடற்பயிற்சி மிகவும் நல்லது!

நீங்கள் உடற்பயிற்சி செய்வது, உண்மையில் உங்களைப் பற்றி நன்றாக உணர உதவுகிறது. எந்த வகையான உடற்பயிற்சியை மேற்கொள்வது உங்களுக்கு நன்மை தரும் என்பதை தெரிந்து, அதை தொடர்ந்து கடைபிடிக்கவும்.

நிமிர்ந்து அமருங்கள்!

நிமிர்ந்து உட்கார்ந்திருப்பது உண்மையில் உங்களை மிகவும் சக்திமிக்கவராகவும், நம்பிக்கையுடனும் உணர வைக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. உங்கள் நாடியை நேராக வைத்து, தோள்களை நிமிர்த்தி வைப்பது உங்களை ஆளுமைமிக்கவராக விளங்கச்செய்யும்.

இவை அனைத்தையும் விட நீங்கள் செய்யக்கூடிய முக்கியமான விஷயம், உங்கள் மீது நம்பிக்கையுடன் இருப்பதுதான். முதலில் உங்களை நீங்கள் நேசிக்கத் தொடங்குங்கள். பின்னர் அனைவரும் உங்களை நேசிப்பார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Beauty Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment