-சோனல் கபூர்
‘பாலியல் உறவு மற்றும் குழந்தை பிறப்பு’குறித்த தவிர்க்க முடியாத பேச்சை, தங்கள் குழந்தைகளிடம் பேசுவதற்கு நிறைய பெற்றோர்களுக்குச் சங்கடமாக இருக்கிறது. முரண்பாடாக, இது அதிக கவனம் தேவைப்படும் தலைப்பு. ஒரு நாட்டின் ஒட்டு மொத்த கருத்தாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பதிவுகளை கண்டறிவது எப்படி மிகவும் எளிதானதோ அப்படி தங்களைத் தற்காத்துக் கொள்ள நமது குழந்தைகளைத் தயார்படுத்துவதற்கு நாம் போதுமானவற்றைச் செய்யவில்லை. ஆனால் பெரும்பாலான கல்வியாளர்களும் பெற்றோர்களும் ஒப்புக்கொள்ளத் தவறியது . என்னவென்றால், பாலியல் பற்றிய உரையாடல்கள், பாலினத்தைப் பற்றிய புரிதலுடன் கூடிய உரையாடல்களுடன் தொடங்குகின்றன.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
டெல்லியை தளமாகக் கொண்ட சிறுவர் உரிமை அமைப்பான புரோட்சஹானில் பணியாற்றியபோது, தங்கள் வீட்டுச் சிறுமிகளின் கல்வி அல்லது ஆரோக்கியத்தில் முதலீடு செய்வதை விட, 18 வயதிற்கு முன்னர் அவர்களைத் திருமணம் செய்து கொடுத்து விடுவது நல்லது என்று கருதும் குடும்பங்களை நாங்கள் அடிக்கடி சந்திப்போம். ஏனென்றால் அவர்களுக்கு அவை முன்னுரிமை அல்ல. அவர்களுடன், பாலினம் மற்றும் பாலியல் பற்றி கலந்துரையாடுவதற்காக தனியாக விட்டுவிடுவார்கள். பண ரீதியாக சிறப்பாக செலவழிக்கக்கூடிய குடும்பங்களில் குழந்தைகளின் நிலை சிறப்பாக இருக்கும் என்று நீங்கள் நம்ப விரும்பலாம். ஆனால் அப்படி இல்லை. நிதி வசதி படைத்த அல்லது நடுத்தர வர்க்க குடும்பங்களில், பாலுணர்வைச் சுற்றியுள்ள உரையாடல்கள் மிகவும் மதிப்பு குறைவாக பார்க்கப்படுகின்றன, இதனால் ஒரு பருவ வயது குழந்தை அது குறித்து பெற்றோரிடம் பேசுவதை சங்கடமாக உணர்கிறது மற்றும் குழந்தை பருவத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானால் அவர்களின் அனுபவத்தைப் பற்றி “சொல்லக்கூடாது” என்ற முடிவைத் தேர்வுசெய்கிறது மற்றும் சில சந்தர்ப்பங்களில் அதைத் தொடர்ந்து பொறுத்துக் கொள்கிறது. இதுபோன்ற உரையாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று உங்கள் பிள்ளை முடிவு செய்து, மாறாக ஒரு நண்பரிடம் நம்பிக்கை வைத்தால், அதை வெளிப்படுத்துதலுக்கான சூழலை உருவாக்குவதற்கோ அல்லது பாலியல் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கோ நீங்கள் ஒரு பெற்றோராக, அதற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்ய வேண்டும். நீங்கள் அதை நீண்ட காலத்துக்குத்தள்ளி வைக்க முடியாது, நேரம் வரும்போது, உங்கள் இருக்கையில் அங்கும் இங்கும் நெளிவதை விட, அவர்களின் கேள்விகளை உணர்வுபூர்வமாகவும் எச்சரிக்கையுடனும் எடுத்துக்கொள்வதும் மிகவும் அவசியம். மேலும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட பயமுறுத்தும் அரைகுறை உண்மையைக் காட்டிலும், ஆழந்த உண்மையின் அடிப்படையில் சரியான அறிவை உங்கள் குழந்தைக்கு கடத்துவதும் அவசியம்.
இந்திய வீடுகளில் செக்ஸ், பருவமடைதல் மற்றும் தடைசெய்யப்பட்ட தலைப்புகள்
குழந்தைகள் தங்கள் அந்தரங்க உறுப்புகளை எப்படி அழைக்க வேண்டும்?
குழந்தைகள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்? உங்கள் குழந்தைக்கு பருவமடைவதைப் பற்றி நீங்கள் முன்கூட்டியே எச்சரிக்க வேண்டுமா? உங்கள் குழந்தையின் தொண்டையில் ஒரு ஸ்பூன் உணவை திணிப்பதை விட அல்லது அவர்களைத் திசை திருப்புவதற்குப் பதிலாக, அவர்களுக்கு வசதியாக இருக்கும் போதெல்லாம் இந்த விஷயத்தைப் பேசுவது முக்கியம். ஆமாம், பல கேள்விகள் உள்ளன மற்றும் எளிதான பதில்கள் இல்லை. ஆனால் இனியும் பாலினம், பாலியல் மற்றும் பருவமடைதல் பற்றி பேசுவது எந்தவொரு வீட்டிலும் தடைசெய்யப்படாத தலைப்பாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், இது ஆரோக்கியமான உறவுகளின் வளர்ச்சியைத் தடுக்கலாம், குழந்தைகளை துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கலாம் மற்றும் அவர்களின் உடல்கள் மற்றும் பாலியல் பற்றி பொதுவாக தவறான கருத்துக்களை அளிக்கலாம். குழந்தைகள் உங்களிடம் கடினமான கேள்விகளைக் கேட்கப் போகிறார்கள் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு, அவர்களின் புரிதலுக்கும் கிரகித்துக்கொள்ளக்கூடிய அளவுக்கும் பொருந்தக்கூடிய வகையில் அவர்களுக்கு பதிலளிக்கத் தயாராக இருங்கள்.
ஒரு நேரத்தில் ஒரு வயதினரைப் புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு உதவுதல்
உங்கள் தத்தி தத்தி நடக்கும் உங்கள் குழந்தையுடன் உடனே பாலியல் பற்றி பேச முடியாது. தகவல்களை படிப்படியாக அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இங்கே அந்தந்த வயதுக்கு ஏற்ப குழந்தைகளால் புரிந்து கொள்ள முடியும்.
* வயது 4+: அந்தரங்க உடல் உறுப்புகளுக்கு (அதாவது யோனி மற்றும் ஆண்குறி)
பொருத்தமான சொற்களைக் குறிப்பிடவும். இனப்பெருக்கம் குறித்த விவரங்களை நுட்பமாக கோடிட்டுக் காட்டுவதன் மூலம் ஒரு குழந்தை எவ்வாறு பிறக்கிறது என்பதை விளக்குங்கள். உதாரணமாக, “உங்கள் அம்மாவின் வயிற்றில் கருப்பை இருக்கிறது. நீ பிறப்பதற்கு முன்பே நீ வாழ்ந்த இடம் அதுதான் ” என்பது போதுமானது.
* வயது 8+: பொதுவாக, ஒரு குழந்தை எவ்வாறு பிறக்கிறது என்பதைப் பற்றி பேசுங்கள். “அம்மாவும் அப்பாவும் உன்னை உண்டாக்கினார்கள்.” கேள்விகள் தொடர்ந்தால், “அப்பாவின் உடலில் உள்ள ஒரு செல் விந்து என அழைக்கப்படுகிறது. இது மம்மியின் உடலுக்குள் இருக்கும் முட்டை எனப்படும் ஒரு சிறிய செல்லுடன் இணைந்து குழந்தையானது.” ஒரு குழந்தை எவ்வாறு பிறக்கிறது என்பதற்கான நேர்மையான பதிலைக் கூறுங்கள். “நீ பிறக்கப் போனபோது, கருப்பை உன்னை மம்மியின் யோனியிலிருந்து வெளியேற்றியது.” விவரங்களுக்குள் அதிகமாக செல்லாமல் உடலுறவு பற்றிய அடிப்படை புரிதல். பாலினம் மற்றும் உறவுகள் பற்றி விளக்குங்கள். மக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பைக் காட்டும் வழிகளில் இதுவும் எப்படி ஒன்றாக உள்ளது. உணர்வுகளை மதிப்பது பற்றி பேசுங்கள்.
* வயது 10+: பாலியலின் முக்கியத்துவத்தை நீங்கள் கூறலாம். மேலும், கற்பழிப்பு பற்றியும், ஒருவர் மற்றொரு நபரை உடலுறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்துவது எப்படி என்பது பற்றியும் பேசுங்கள். உங்கள் குழந்தைகள் கேட்கும் செய்திகள் அல்லது சகாக்களிடமிருந்து கேட்கும் பருவமடைதல் மற்றும் உடலுறவின் போது நிகழும் மாற்றங்கள் தொடர்புடைய தலைப்புகள். இந்த வயதில் குழந்தைகள் தங்கள் சொந்த மதிப்பு அமைப்புகளுடன் வருகிறார்கள். உங்கள் பிள்ளைகள் பெறக்கூடிய தகவல்களுக்கு மேம்பட்ட சூழ்நிலை தகவல்களை நீங்கள் வழங்குகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
* வயது 15+: செக்ஸ் மற்றும் பாலியல் குறித்த செய்தித்தாள் கட்டுரைகளைப் பற்றி விவாதிக்கவும். புத்திசாலித்தனமான உரையாடலில் அவர்களை ஈடுபடுத்துங்கள். கருத்தடை மற்றும் பாலியல் உறவுக்காக சக்தி மருந்துகளைப் பயன்படுத்துவது என்பது முற்றிலும் தவறானது என்பதைப் பற்றி மேலும் விரிவாகப் பேசுங்கள். POCSO (பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டம் பற்றி அவர்களிடம் பேசுங்கள்.
பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்:
* நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் செக்ஸ் பற்றி பேசுவதால் மட்டும், அவர்களுக்கு உடலுறவு கொள்வதற்கான விருப்பத்தை ஏற்படுத்திவிடாது! பாலியல் குறித்து உணர்வுபூர்வமாக விவாதித்த குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் முதல் முறையாக அதைப் பெற தயாராக இருக்கும் வரை காத்திருப்பதாகவும், கருத்தடைகளைப் பயன்படுத்துவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்கள் சம்மதத்தை நன்கு புரிந்துகொள்கிறார்கள். மேலும் “முடியாது” என்று சொல்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்பதை அவர்கள் அறிவார்கள்.
* குழந்தைகளிடமிருந்து வரும் கேள்விகளினால் அவர்கள் குறித்து “நீங்கள் மோசமாக உணர்கிறீர்கள்”என்பதாலேயே அக்கேள்விகளைத் தவிர்க்க வேண்டாம். 4-5 வயதில் ஒரு குழந்தைக்கு பாலியலுக்கான அர்த்தங்கள் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் வெறுமனே அப்பாவித்தனமாக ஆர்வமாக இருக்கலாம். கேள்விகளுக்கு நன்றாக பதிலளியுங்கள், ஏமாற்ற வேண்டாம்.
* குழந்தைகளிடம் “அவர்களின் வயதிற்கு ஏற்றது அல்ல” என்று நீங்கள் நினைக்கும் கேள்விகள் இருந்தால், அவர்களை ஒருபோதும் வெட்கப்பட வைக்க வேண்டாம். இந்த இணைய மற்றும் அதீத தகவல் யுகத்தில், உங்களிடமிருந்து மறைக்கப்பட்ட விஷயங்கள் குறித்து லட்சக்கணக்கான தரவுகள் மூலம் உங்கள் பிள்ளை நிறைய தகவல்களை உள்வாங்கிக் கொண்டிருக்கலாம்.
* அதிகமான தகவல்களைத் தெரிவிப்பதைத் தவிர்க்கவும், இல்லையெனில் நீங்கள் மாறிவிடப் போகிறீர்கள். வயதான குழந்தைகள் தங்களுக்கு விஷயங்கள் தெரியாது என்று ஒப்புக் கொள்ளாமல் இருக்கலாம். ஆகவே, உங்கள் இளம் பிள்ளைகள் தங்களுக்கு செக்ஸ் பற்றி எல்லாம் தெரியும் என்று சொன்னால், அவர்களுக்கு என்ன தெரியும் என்று அவர்களிடம் கேளுங்கள், பின்னர் இடைவெளிகளை நிரப்பவும்.
* பாலியல் உரையாடல்கள் சரியாக நடத்தப்படுவது குழந்தைகளை அதிக விவேகமானவர்களாகவும் மற்றும் உணர்வுபூர்வமிக்கவர்களாகவும் ஆக்குகிறது. உதாரணமாக, ஒரு தாய் ஒரு பையனுக்கு மாதவிடாயைப் பற்றி கற்பிக்கும் போது, அடுத்த முறை பள்ளியில் ஒரு வகுப்பில் ஒரு பெண் தனது பாவாடையில் மாதவிடாய்க்கான ரத்த கறை படிந்தால், அந்த பையன் மற்றவர்களுடன் சேர்ந்து சிரிக்கவோ, கேலி செய்யவோ மாட்டான். உண்மையில் சொல்லப்போனால், மற்றவர்களை அவ்வாறு நடந்து கொள்வதை நிறுத்தச் சொல்வதோடு, சக வகுப்பு தோழியைச் சாதாரணமாகவும் வசதியாகவும் உணர வைக்கும்.
* மார்பகத்தை, மார்பகம் என்றே அழைக்கவும். யோனியை யோனி என்று அழைக்கவும். ஒரு ஆண்குறி, ஒரு ஆண்குறி என்று அழைக்கவும். ‘சீ… சீ…’, ‘ஷேம்… ஷேம்’ போன்ற வெட்கக்கேடான வார்த்தைகளால் பெயரிடுவது தடைகளை பெருக்கி, குழந்தைக்கு வெட்கக்கேடான பாரம்பரியத்தைத் தூண்டுகிறது.
* மாதவிடாய் குறித்து நேர்மறையான எண்ணத்துடன் சிறுமிகள் மற்றும் சிறுவர்களை வளர்க்கவும். பாலின உணர்திறன் கொண்டவர்களாக சிறுமிகள் மற்றும் சிறுவர்களை வளர்க்கவும். ஆர்வமுள்ளவர்களாக கேலி செய்யப்படாத சூழலில் குழந்தைகளை வளர்க்கவும்.
உரையாடலைத் தொடங்க உதவும் புத்தகங்கள்
* Just for boys/Just for Girls: வளர்வது பற்றிய புத்தகம்
* 21 Things Every Teen Should Know
* My Little Body Book: நம்மைப் பாதுகாப்பாக வைத்திருத்தல்
* Why India Should Go All the Way: குழந்தைகளுக்கான செக்ஸ் கல்வி புத்தகம்
* The Yellow Book: பாலியல் கல்விக்கான பெற்றோருக்கான வழிகாட்டி
* Let’s Talk About Where Babies Come From: ராபி ஹாரிஸ்
உங்கள் குழந்தைகள் தங்கள் வயதுவந்த வாழ்க்கையில் செய்யும் தேர்வுகள் மற்றும் முடிவுகள் அவர்கள் இளம் வயதிலேயே விஷயங்களை எவ்வாறு உணர்கிறார்கள் என்பதோடு நிறைய தொடர்பு கொண்டுள்ளன. அவற்றின் வரையறுக்கப்பட்ட வரையறைகளைப் பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக, அவர்களின் எல்லா கேள்விகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் பதிலளிக்க வேண்டியது அவசியம். எல்லாவற்றிற்கும் மேல், உங்களைத் தவிர வேறு இடங்களுக்குத் திரும்புவதற்கு அவர்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லை என்ற உறுதிமொழியைக் கொடுங்கள்.
(சோனல் கபூர், டெல்லியை தளமாகக் கொண்ட குழந்தை உரிமை அமைப்பான புரோட்சஹான் இந்தியா அறக்கட்டளையின் நிறுவனர் இயக்குநராக உள்ளார். போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணர்வை பரப்புதல், அடிமட்டத்தில் துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளும் குழந்தைகளை மீட்பது மற்றும் சிறுவர் கடத்தலுக்கு எதிரான வாதத்தை வலுப்படுத்துவது குறித்து அவர் விரிவான பணிகளைச் செய்துள்ளார்.)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil