நிறைவான, திருப்திகரமான பாலியல் வாழ்க்கைக்கு நல்ல ஆரோக்கியமும் ஒட்டுமொத்த நல்வாழ்வும் அவசியம். ஆனால் கர்ப்பம் தரிப்பதை உறுதி செய்ய உடலுறவுக்கு ஒரு சிறந்த நேரம் உள்ளதா? கருவுறுதல் நிபுணர் மகேஷ் ஜெயராமன், பெரும்பாலான தம்பதிகள் பகல் வேலை முடிந்த பிறகு இரவில் எப்படி முயற்சி செய்கிறார்கள் என்பதை கூறினார்.
ஆனால் ஆயுர்வேதம் மற்றும் ஒரு சில ஆய்வுகள் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை காலையில் அதிகமாக இருக்கலாம் என்று கண்டறிந்துள்ளது. இது எளிமையான, சீரான நல்ல இரவு தூக்கத்தின் தரம் காரணமாக இருக்கலாம் என்று நமது ஆயுர்வேத மருத்துவர்கள் நினைக்கிறார்கள். நாள் முடிவில் உடல் ஓய்வெடுக்க ஏங்கலாம். எனவே, பொது அறிவு சில சமயங்களில் புரியும், என்றார் ஜெயராமன்.
இது உண்மையா?
உடலுறவுக்கான சிறந்த நேரத்தை தீர்மானிக்கும் போது, ஆயுர்வேதம் ஒரு தனிநபரின் தனித்துவமான உடலமைப்பைப் புரிந்துகொள்வதன் (வாதம், பித்தம், கபம்) முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இவை ஒரு நபரின் உடல் மற்றும் மன பண்புகளை கட்டுப்படுத்துகின்றன.
ஆயுர்வேத மருத்துவர் டிக்ஸா பாவ்சர் “மெலடோனின், ஒரு ரிலாக்சேஷன் ஹார்மோன் இரவில் அதிகமாக இருக்கும்” என்று உறுதியளிக்கிறார்.
டாக்டர் ப்ரீத் பால் தாக்கூர் கூறுகையில், ஒவ்வொரு தோஷமும் (வாதம், பித்தம், கபம்) பகலில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் குறிப்பிட்ட நேரங்களைக் கொண்டுள்ளது, இது பாலியல் ஆசை மற்றும் செயல்திறனை பாதிக்கும்.
வாதம் உள்ள நபர்களுக்கு, அதிகாலை உடலுறவுக்கான சிறந்த நேரம் ஆகும், அப்போது வாத ஆற்றல் மிக அதிகமாக இருக்கும். பித்தம் உள்ள நபர்கள் தங்கள் பாலியல் ஆற்றல், மாலையின் ஆரம்பத்தில் உச்சத்தை அடைவதைக் காணலாம். கபம் ஆற்றல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் அந்திமாலை அல்லது அதிகாலையில் கபம் உள்ள நபர்கள் வலுவான பாலியல் ஆற்றலைக் கொண்டிருக்கலாம், என்று டாக்டர் தாக்கூர் கூறினார்.
ஒருவரின் தோஷத்தைப் புரிந்துகொள்வதோடு, ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, மன அழுத்தத்தை நிர்வகித்தல் மற்றும் போதுமான நிம்மதியான தூக்கம் ஆகியவை இதில் அடங்கும்.

உடலுறவுக்கு சிறந்த நேரம் இருக்கிறதா?
டாக்டர் தாக்கூரின் கூற்றுப்படி, ஆயுர்வேதம் பாலியல் ஆற்றலை மனித வாழ்வின் புனிதமான அம்சமாகக் கருதுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பாலியல் செயல்பாடுகளை கவனத்துடன், மரியாதை மற்றும் விழிப்புணர்வுடன் அணுகுவதன் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது. ஒருவரின் சொந்த உடல் மற்றும் தேவைகள், துணையின் தேவைகளுக்கு இணங்குவது இதில் அடங்கும், என்று டாக்டர் தாக்கூர் கூறினார்.
இதை ஒப்புக்கொண்ட டாக்டர் சந்தோஷ் பாண்டே, “காலை உடலுறவு சிறந்தது” ஏனெனில் பலரது உடலில் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அதிக அளவில் உள்ளது, இது பாலியல் ஆசையில் செல்வாக்கு செலுத்தும் இரண்டு ஹார்மோன்கள்.
ஒரு நல்ல இரவு ஓய்வுக்குப் பிறகு ஆற்றல் அளவுகள் மிக அதிகமாக இருக்கும், அதாவது இரு பாலினருக்கும் அதிக சக்தி இருக்கும். உடலுறவின் போது எண்டோர்பின்கள் மற்றும் டோபமைன்கள் வெளியிடப்படுகின்றன, இது நல்ல மனநிலையில் இருப்பதற்கும் உங்கள் நாளை சரியாகத் தொடங்குவதற்கும் ஒரு சிறந்த வழியாகும், என்று டாக்டர் பாண்டே கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“