பிரபல காஃபி வித் கரன் நிகழ்ச்சியில், வரவிருக்கும் எபிசோடில், நடிகர் அனில் கபூரை, இளமையாக உணர வைக்கும் மூன்று விஷயங்களை கூறுமாறு தொகுப்பாளர் கரண் ஜோஹர் கேட்டுக் கொண்டார். அதற்கு அனில், “செக்ஸ், செக்ஸ், செக்ஸ்” என்று பதிலளித்தார்.
Advertisment
ஒருவேளை அனில் கபூர், நகைச்சுவையாக கூட பதிலளித்திருக்கலாம், ஆனால் உண்மையில் உடலுறவுக்கும், வயதுக்கும் இடையே தொடர்பு உள்ளதா?
நாங்கள் கண்டுபிடித்தது இங்கே.
இரண்டுக்கும் இடையே உள்ள உறவை அறிய பல ஆய்வுகள் முயற்சி செய்கின்றன. பிரபல எழுத்தாளர் மைக்கேல் ரோய்சன் தனது அதிகம் விற்பனையாகும் புத்தகத்தில், RealAge — You are Young as You can be?, கிடைக்கக்கூடிய இலக்கியங்களை ஆய்வு செய்த பிறகு, உடலுறவின் ஆன்டி ஏஜிங் விளைவுகள் உண்மையானவை என்று குறிப்பிட்டார்.
Advertisment
Advertisements
WebMD படி, வாரத்திற்கு ஒரு முறை உடலுறவு கொள்வதை விட, வாரத்திற்கு இரண்டு முறை உடலுறவு கொள்வது, உங்களின் உண்மையான வயதை விட 1.6 வயதாக குறைக்கும் என்று ரோய்சன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார், உண்மையான வயது' என்பது "உங்கள் வயதை உயிரியல் அடிப்படையில் மதிப்பிடுவது, ஆண்டுகள் அடிப்படையில் அல்ல" என அவர் வரையறுக்கிறார்.
டிசம்பர் 1982ல், Gerontologist இதழில் வெளியான மற்றொரு ஆய்வு, உடலுறவின் அதிர்வெண் (ஆண்களுக்கு) மற்றும் உடலுறவின் இன்பம் (பெண்களுக்கு) நீண்ட ஆயுளைக் கணிப்பதைக் கண்டறிந்தது.
ஜனவரி 2008 இல் கொல்கத்தாவில் நடந்த இந்திய மனநல சங்கத்தின் 60வது ஆண்டு தேசிய மாநாட்டில் பாம்பே சைக்கியாட்ரிக் சொசைட்டி சில்வர் ஜூபிலி தேசிய விருதை வென்ற ஒரு ஆய்வுக் கட்டுரை, வயதுக்கு ஏற்ப ஏற்படும் மாற்றங்கள் ஒரு நபரின் பாலியல் வாழ்க்கையை மிகவும் கடினமாக்கும் அதே வேளையில், இன்னும் ஒரு உள் உந்துதல் அல்லது பாலியல் நிறைவுக்கான தேவை உள்ளது என்று குறிப்பிட்டது.
உண்மையில், அதிக சதவீத ஆண்கள் (83.4 சதவீதம்) 50 வயதிற்குப் பிறகும் தங்கள் பாலியல் செயல்பாடுகளை பராமரிக்கின்றனர் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடலுறவு மற்றும் நெருக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு என்ன செய்யும்? (Pexels)
வழக்கமான உடலுறவு ஒருவரை இளமையாக உணர வைக்கும் என்று மருத்துவர் சிராக் பண்டாரி கூறுகிறார். "பாலியல் செயல்பாடுகளுக்குப் பிறகு, எண்டோர்பின்கள் அல்லது மகிழ்ச்சியான ஹார்மோன்கள் உயர்கின்றன. வழக்கமான பாலியல் செயல்பாடுகளுடன், டெஸ்டோஸ்டிரோன்கள் – (வயதான எதிர்ப்பு ஹார்மோனாகக் கருதப்படுகிறது) உயர்கிறது.
எனவே, உங்களிடம் நல்ல அளவு டெஸ்டோஸ்டிரோன்கள் இருந்தால், நீங்கள் அழகாக உணர முடியும், இது உங்களை வடிவாக வைத்திருக்கும், என்று மருத்துவர் பண்டாரி கூறினார்.
இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு, உங்கள் ஒட்டுமொத்த உடற்தகுதியைக் கருத்தில் கொண்டு, இருதயநோய் நிபுணரும் கூட உடலுறவுச் செயல்பாட்டை அனுமதிக்கலாம் என்று மருத்துவர் சஞ்சய் குமாவத் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
மாரடைப்பு என்பது பாலியல் செயல்பாடுகளுக்கு முடிவு அல்ல. இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு தசை சக்தியும் சகிப்புத்தன்மையும் இயல்பு நிலைக்கு வரும்.
மருத்துவர் குமாவத் சிறந்த பாலியல் ஆசைக்கு இன்னும் சில குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.
உளவியல் அழுத்தங்கள் பாதிப்பை ஏற்படுத்தலாம், எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கொண்டிருப்பது அவசியம்.
சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்.
எதிர்மறையான சிந்தனையை அகற்றி, ஒருவரின் ஆற்றலைத் தொடர உதவும், சில பொழுதுபோக்குகளை வைத்திருங்கள்.
புதிர்கள் மூலம் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும்.
புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.
சரியான நேரத்தில் தூங்குவது அவசியம்.
ஆயுர்வேத நிபுணர் ரேகா ராதாமோனியின் கூற்றுப்படி, மேம்பட்ட ஆண்மை மற்றும் பாலியல் ஆரோக்கியத்திற்காக நீங்கள் உட்கொள்ளக்கூடிய சில உணவுகள் இங்கே உள்ளன.
மாதுளை
இது பாலியல் உணர்வு மற்றும் இனப்பெருக்க திரவங்களின் தரத்தை அதிகரிக்க உதவுகிறது, கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்கள் தினமும் மாதுளை உட்கொள்வது நல்லது.
பார்லி சூப்
இது பிறப்புறுப்புகளுக்கு சுழற்சியை அதிகரிக்க உதவுகிறது. இது ஆண்களுக்கு சிறந்த விறைப்புத்தன்மைக்கும் உதவுகிறது.
பேரீட்சை
ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கும், கருவுறுதலுக்கும் பேரீச்சம்பழம் சிறந்தது.
நெய் மற்றும் கற்கண்டு சேர்த்து சமைத்த உளுந்து சூப்
இது பாலியல் உணர்வை மேம்படுத்த காரகா சம்ஹிதாவில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு மருத்துவ செய்முறையாகும் என்று அவர் விளக்கினார். உயர் பித்தம் உள்ள மக்கள் அதை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
முருங்கை
இது “விந்து மற்றும் கருமுட்டையின் தரத்தை மேம்படுத்துவதற்கு சிறந்தது”. உங்கள் உணவில் முருங்கை இலைகள் மற்றும் முருங்கைக்காயை சமைத்த வடிவத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“