கருத்தரித்தல் தொடர்பாக பல தவறான கருத்துக்கள் உள்ளன, இதனால் கருத்தரிக்க முயற்சிக்கும் தம்பதிகளுக்கு, உடலுறவில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாத விஷயங்கள் குழப்பமானதாக தோன்றலாம். எவ்வாறாயினும், மற்றவர்கள் சொல்வதைக் கடைப்பிடிப்பதை விட, எப்போதும் தொழில்முறை வழிகாட்டுதலைப் பெற வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அத்தகைய ஒரு கருத்து என்னவென்றால்,உடலுறவுக்குப் பிறகு பெண் சிறுநீர் கழித்தால் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் குறையும் என்பது. ஏனெனில் சிறுநீருடன் விந்துவும் சேர்ந்து வெளியேறும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இது உண்மையா?
மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர் விஜயா ஷெர்பெட் கூறுகையில், விந்துவில் விந்தணுக்கள் உள்ளன, அவை சாதரண கண்ணுக்குத் தெரியாத சிறிய செல்கள்.
பெண்ணின் உடலால் உருவாக்கப்பட்ட ஃபெரோமோன்கள் (Pheromones) விந்தணுக்களை ஈர்க்கின்றன, அவை ஒருமுறை உள்ளே நுழைந்தவுடன் அவற்றின் வால் உதவியுடன் சுதந்திரமாக நகரும். உடலுறவுக்குப் பிறகு அவள் உடலை விட்டு வெளியேறும் வெள்ளை திரவம் விந்தணுவைக் கொண்டு செல்லும் ஒரு வாகனம், எனவே, உடலுறவுக்குப் பிறகு சிறுநீர் கழிப்பது அல்லது கழுவுவது கர்ப்பத்தைத் தடுக்காது என்கிறார் டாக்டர் ஷெர்பெட்.
கருவுறுதல் ஆலோசகர் சினேகா சாத்தே இதை ஒப்புக்கொண்டார், உடலுறவுக்குப் பிறகு சிறுநீர் கழிப்பது கர்ப்பத்தின் சாத்தியக்கூறுகளில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, உண்மையில், உடலுறவுக்குப் பிறகு சிறுநீர் கழிப்பதால் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்கிறார் டாக்டர் சாத்தே.
ஏன் என்பதைப் புரிந்து கொள்ள, விரைவான உடற்கூறியல் பாடத்தைப் பெறுவோம்.
உடலில் இருந்து வெளியேற, சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர்க்குழாய் வழியாக சிறுநீர் செல்கிறது. பெண் சிறுநீர்க்குழாய் ஒப்பீட்டளவில் குறுகியது, 1.5 செமீ நீளம் மட்டுமே உள்ளது. சிறுநீர்க்குழாய் திறப்பு (meatus) வெஜினாவுக்கும், சில்டோரிஸூக்கும் இடையில் அமைந்துள்ளது மற்றும் ஆசனவாய்க்கு அருகில் உள்ளது. இது பாலியல் செயல்பாட்டின் போது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உங்கள் சிறுநீர்க்குழாய்க்குள் நுழையும் அபாயத்தை அதிகரிக்கிறது, இது சிறுநீர் பாதை தொற்றுக்கு (UTI) வழிவகுக்கும்.
உடலுறவுக்குப் பிறகு சிறுநீர் கழிப்பது சிறுநீர்க் குழாயில் உள்ள பாக்டீரியாவைக் கழுவி, அதன் மூலம் சிறுநீர் பாதை தொற்று உருவாகும் அபாயத்தைக் குறைக்கும், என்கிறார் டாக்டர் சாத்தே.
ஆனால், நீங்கள் கருத்தரிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் இது சரியா?
ஆம், முற்றிலும் சரி, என்று டாக்டர் சாத்தே வலியுறுத்துகிறார்.

உடலுறவுக்குப் பிறகு சிறுநீர் கழிப்பது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பைக் குறைக்காது. சிறுநீர்க்குழாய் மற்றும் பிறப்புறுப்பு ஆகியவை ஒன்றோடொன்று நெருக்கமாக அமைந்திருந்தாலும், அவை தனித்தனி உறுப்புகள் என்பதை புரிந்துகொள்வது அவசியம் என்று டாக்டர் சாத்தே மேலும் விளக்குகிறார்.
உடலிலிருந்து சிறுநீரை வெளியேற்றுவதற்கு சிறுநீர்க்குழாய் பொறுப்பாகும், அதே நேரத்தில் உடலுறவின் போது விந்து வெளியேறும் இடத்தில் யோனி உள்ளது. உடலுறவுக்குப் பிறகு சிறுநீர் கழிக்க நீங்கள் எழும்போது, சில விந்தணு திரவம் வெளியேறுவதை நீங்கள் கவனிக்கலாம். இது சாதாரணமானது. பிறப்புறுப்பிலிருந்து சில விந்துக்கள் (விந்தணுவைக் கொண்டவை) வெளியேறினாலும், கருமுட்டையை கருவுறச் செய்ய இன்னும் போதுமான அளவு உள்ளது, என்று டாக்டர் சாத்தே கூறினார்.
இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், உடலுறவுக்குப் பிறகு சிறுநீர் கழிப்பது உங்கள் கருத்தரிக்கும் வாய்ப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது, உண்மையில், இது உடலுறவுக்குப் பிறகு அதிகரிக்கும் சிறுநீர் பாதை தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக செயல்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“