நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், குறைந்த பாலியல் உணர்வு, நீண்ட கோவிட் நோயின் 62 அறிகுறிகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதை ஒப்புக்கொண்ட ஆயுர்வேத மருத்துவர் ரேகா ராதாமோனி, குறிப்பாக கோவிட்க்குப் பிறகு, பல நோயாளிகள் குறைந்த பாலியல் ஆரோக்கியம் மற்றும் ஆண்மை பற்றி புகார் செய்வதை நான் பார்த்திருக்கிறேன் என்றார்.
Advertisment
ஆயுர்வேதத்தில் உணவு மற்றும் தூக்கத்திற்குப் பிறகு, உடலுறவு என்பது ஆரோக்கியத்தின் மூன்று தூண்களில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.
பாலியல் உணர்வு குறைவதற்கான காரணங்களை விளக்கிய, கருவுறுதல் ஆலோசகர் ஜூஹி பாண்டே, ஏற்கனவே சோர்வுடன் போராடி, தனது அன்றாட வழக்கத்திற்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் ஒருவருக்கு, செக்ஸ் உணர்வு குறைவது மிகவும் இயற்கையானது என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார். மேலும், சமூக விலகல், லாக் டவுன், பதட்டம், மனச்சோர்வு மற்றும் தனிமை ஆகியவை மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தையும் பாதித்துள்ளன. இதன் விளைவாக, இது பாலியல் இயக்கத்தை பாதிக்கிறது.
பலர் தங்கள் பாலியல் ஆரோக்கியத்திற்கு உதவ கூடுதல் மருந்துகளின் பின்னால் ஓட, மருத்துவர் ராதாமோனி அக்னியை மேம்படுத்தும் உணவை சாப்பிட பரிந்துரைக்கிறார் "உங்கள் உடல் உணவில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சிவிடும்".
Advertisment
Advertisements
ஆயுர்வேத நிபுணரின் கூற்றுப்படி, பாலியல் ஆரோக்கியத்திற்காக நீங்கள் உட்கொள்ளக்கூடிய சில உணவுகள் இங்கே உள்ளன.
மாதுளை
இது பாலியல் உணர்வு மற்றும் இனப்பெருக்க திரவங்களின் தரத்தை அதிகரிக்க உதவுகிறது, கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்கள் தினமும் மாதுளை உட்கொள்வது நல்லது.
பார்லி சூப்
இது பிறப்புறுப்புகளுக்கு சுழற்சியை அதிகரிக்க உதவுகிறது. இது ஆண்களுக்கு சிறந்த விறைப்புத்தன்மைக்கும் உதவுகிறது.
பேரீட்சை
ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கும், கருவுறுதலுக்கும் பேரீச்சம்பழம் சிறந்தது.
நெய் மற்றும் கற்கண்டு சேர்த்து சமைத்த உளுந்து சூப்
இது பாலியல் உணர்வை மேம்படுத்த காரகா சம்ஹிதாவில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு மருத்துவ செய்முறையாகும் என்று அவர் விளக்கினார். உயர் பித்தம் உள்ள மக்கள் அதை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
முருங்கை
இது "விந்து மற்றும் கருமுட்டையின் தரத்தை மேம்படுத்துவதற்கு சிறந்தது". உங்கள் உணவில் முருங்கை இலைகள் மற்றும் முருங்கைக்காயை சமைத்த வடிவத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“