உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் ஒவ்வொரு நாளும் 1 மில்லியனுக்கும் அதிகமான பாலியல் மூலம் பரவும் நோய்த் தொற்றுகள் (STI) நிகழ்கின்றன, அவற்றில் பெரும்பாலானவை அறிகுறியற்றவை.
பாலியல் நோய்த் தொற்றுகள், எந்த வகையான உடலுறவின் மூலமாகவும் பரவலாம். இது பாதிக்கப்பட்ட ரத்தத்தின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கடத்தப்படுகிறது என்கிறார், டாக்டர் ஜாக்ரிதி வர்ஷ்னி.
உதாரணமாக, இன்ட்ரவெனஸ் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களில், ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அதே ஊசியைப் பகிர்ந்துகொள்வது மற்ற நபருக்கு தொற்றுநோயைப் பரப்பும்.
டாக்டர் திவ்யா வோரா, உடலுறவு இல்லாமலேயே பாலியல் நோய்த் தொற்றுகள் (STI) வருவதற்கான சில வழிகளை விளக்கினார்.
முத்தம் நோயான மோனோநியூக்ளியோசிஸைத் தவிர (mononucleosis), oral herpes நோயால் உங்கள் துணை பாதிக்கப்பட்டிருந்தால், அவருடன் தொடர்பு கொள்வதன் மூலம் அது உங்களுக்கும் வரலாம். இது லிப் பாம், குடிநீர் பாத்திரங்கள் மற்றும் சாப்பாடு பாத்திரங்களுக்கும் பொருந்தும். எனவே நீங்கள் யாருடன் உமிழ்நீரை மாற்றுகிறீர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
இதேபோல், ஹெர்பெஸ் வைரஸ்- தோல் அல்லது உமிழ்நீர் போன்ற உடல் திரவங்கள் மூலம் பரவுகிறது. எனவே பாதிக்கப்பட்ட நபரை முத்தமிட்டால் வைரஸால் பாதிக்கப்படலாம்.
மேலும், பாதிக்கப்பட்ட ரத்தத்தின் மூலம் பாலியல் நோய்த் தொற்றுகள் பரவக்கூடும் என்பதால், HIV, ஹெபடைடிஸ் பி மற்றும் சி போன்ற ரத்தத்தில் பரவும் நோய்த்தொற்றுகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன, என்று டாக்டர் வர்ஷ்னி கூறினார்.
நீங்கள் பிசிக்கல் உடலுறவில் ஈடுபடாவிட்டாலும், மற்றொரு நபரின் உடல் திரவம் அல்லது பிறப்புறுப்புகளுக்கு உங்களை வெளிப்படுத்தும் எதுவும் - அது சுயஇன்பம், வாய்வழி உடலுறவு அல்லது வைபிரேட்டர்ஸ் மற்றும் பிற சாதனங்களைப் பகிர்வது போன்றவை STI நோயால் பாதிக்கப்படும் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று டாக்டர் வோரா குறிப்பிட்டார்.
இதற்காக, அவர் ஒரு dental dam அல்லது ஆணுறை பயன்படுத்த பரிந்துரைத்தார்.
மேலும் காது, மூக்கு குத்துதல், பச்சை குத்துதல், ஷேவிங் மூலம் பாலியல் நோய்த்தொற்றுகள் பரவலாம்.
டாக்டர் வர்ஷ்னி புதிய ஊசியைப் பயன்படுத்த பரிந்துரைத்தார், ஏனெனில் தோலைத் துளைக்க அல்லது வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் எந்தவொரு கருவியும் ரத்தத்துடன் தொடர்பு கொள்ளும்போது சில உயிரினங்களின் பரவலுக்கு வழிவகுக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோல எந்த வகையான ரேசரையும் பகிர்ந்து கொள்வது ரத்தத்தை தொற்றுக்கு ஆளாக்கும் என்று அவர் கூறினார்.
ட்ரைகோமோனியாசிஸை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகள் ஈரமான துணிகள் வழியாக பரவக்கூடும், எனவே உங்கள் துணையின் துண்டுகளை பயன்படுத்தும் போது அதை மனதில் கொள்ளுங்கள்.
எனவே, ஆணுறைகள், மருந்துகளை உட்செலுத்துவதற்கு முன் ஊசிகளை கிருமி நீக்கம் செய்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை, டாக்டர் வர்ஷ்னி அறிவுறுத்தினார்.
நிபுணர் குறிப்பிட்டுள்ளபடி, பாலியல் நோய்த்தொற்றுகளின் அறிகுறிகள் பின்வருமாறு:
* penal அல்லது யோனி பகுதிக்கு அருகில் எரிச்சல் அல்லது அரிப்பு
*யோனியில் இருந்து அசாதாரணமான வெளியேற்றம் அல்லது துர்நாற்றம்
* சாதாரண மாதவிடாய் ரத்தத்தில் இருந்து வேறுபட்ட யோனியில் இருந்து ரத்தப்போக்கு
* உடலுறவின் போது வலி
*வாய், பிறப்புறுப்பு அல்லது ஆசனவாயைச் சுற்றி புண்கள் அல்லது கொப்புளங்கள்
* சிறுநீர் தொற்று
நீங்கள் ஏதேனும் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவரை அணுகுமாறு டாக்டர் வர்ஷ்னி பரிந்துரைத்தார்.
மருத்துவர் ரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனைக்கு பரிந்துரைப்பார், இது சரியான காரணத்தை கண்டறிய வழிவகுக்கும், பிறகு அதற்கான சிகிச்சை இருக்கும், என்று அவர் முடித்தார்.
Read in English:
Can you get sexually transmitted infections (STIs) without having sex? Let’s find out
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.