Advertisment

பனி மழையை ரசிக்க இதுதான் சிறந்த நேரம்- ஷபானா ’சிம்லா’ கிளிக்ஸ்

சீரியல் நடிகை ஷபானா தன் கணவர் ஆர்யன் உடன் இப்போது சிம்லாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பல இடங்களில் சுற்றிப் பார்த்த போது எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Shabana

Shabana Aryan

பனிக்காலம் தொடங்கி விட்டது. உறை பனியையும், வெண் பூவாய் விழும் பனி மழையையும் ரசிக்க விரும்புபவர்கள் சிம்லாவிற்குச் செல்ல வேண்டிய காலம் இதுதான்.

Advertisment

ஹிமாச்சல பிரதேசத்தின் தலைநகரான சிம்லா கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,400 மீட்டர் உயரத்தில் மலைப்பிரதேசத்தில் அமைந்த புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். இந்து கடவுள் சியாமளா தேவியினைப் போற்றும் வகையில் சிம்லா எனப் பெயர் பெற்றது.

பிரபல சீரியல் நடிகை ஷபானா தன் கணவர் ஆர்யன் உடன் இப்போது சிம்லாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பல இடங்களில் சுற்றிப் பார்த்த போது எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதத்தில் வெப்பநிலை 7°C முதல் 10°C வரைதான் இருக்கும். அப்போது சென்றால், காலை நேரத்தில் காணும் இடங்கள் எல்லாம் பனிப்போர்வை போர்த்திக் கொண்டு வெண்மை நிறத்தில் பளிங்கு கல் போல் தோன்றுவதைக் காணலாம்.

கடும் குளிரைத் தாங்க முடியாதவர்களுக்கு மார்ச் முதல் ஜூன் வரையிலான காலம் ஏற்ற சீசன். இதமான குளிரை அனுபவிக்கலாம். இந்நாட்களில் வெப்பநிலை 14°C முதல் 20°C வரை இருக்கும். அதன்பின் மழைக்காலம் தொடங்கிவிடும்.

ஆசியா கண்டத்தின் இயற்கை பனிச்சறுக்கு போட்டிகளம் இங்கு மட்டுமே உள்ளது. சிம்லா செல்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய பல இடங்கள் உள்ளது. அவற்றில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அழகிய கட்டடங்கள் முக்கியமானவை.

சிம்லாவிற்குச் சென்று ரயில் பயணத்தையும், இயற்கை அழகையும் ரசிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

எல்லோரும் ரயிலில் பலமுறை சென்றிருப்போம். ஆனால் இந்த ரயிலில் செல்வதென்பது ஒரு இனிமையான மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

இது கண்ணாடி ஜன்னல்கள் கொண்ட பொம்மை ரயில் பயணம்.

சிம்லாவிற்கு ரயிலில் செல்வதற்கு சமவெளிப் பகுதியில் அமைந்துள்ள கல்கா நகர் மட்டுமே ஒரே வழி. 1906-ஆம் ஆண்டு கல்கா - சிம்லா ரயில் பாதை ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது. ரயில் போக்குவரத்தில் ஆங்கிலேயப் பொறியாளர்களின் மிகப் பெரிய சாதனைதான் இந்த பாதை.

அழகான பரிசுப் பொருட்கள் வாங்கச் சிறந்த இடம் சிம்லா. இங்குள்ள மால் சாலை மற்றும் "லக்கர் பஜார்' பகுதிக்குச் சென்றால் சிம்லாவின் புகழ்பெற்ற பல பொருட்களை வாங்கலாம்.

எம்பிராய்டரி வேலைப்பாடு கொண்ட சால்கள், கைக்குட்டைகள், கை உறைகள், தொப்பிகள் மற்றும் அழகான கம்பளிகள், கை விசிறிகள், தரை விரிப்புகள் போன்றவை இங்கு மிக பிரபலம்.

இதுதவிர ஜக்கூ  மலையில் அமைந்துள்ள அனுமன் கோயில், தாரா தேவி மலையின் உச்சியில் உள்ள நட்சத்திர தேவதைகளுக்கான தாரா தேவி கோயில். ஹிமாச்சல பிரதேசத்தின் கலை மற்றும் பண்பாட்டை அறிய உதவும் அரசு அருங்காட்சியகம், சம்மர்ஹில்ஸ் எனப்படும் கோடை மலை, டாட்டா பாணி எனப்படும் கந்தக வெந்நீர் ஊற்று முதலியவை சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டிய இடங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment