’இவங்கள சந்திச்சிட்டா என் பிறவி பயன அடைஞ்சிடுவேன்’: செம்பருத்தி ஷபானாவின் தீராத ஆசை!

ஹோட்டல்களில் கொண்டாடப்படும் பிறந்தநாள் விழாக்களில்  தொகுப்பாளராகவும் நடனக் கலைஞராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.

By: Updated: December 4, 2019, 09:24:05 PM

Sembaruthi Parvathi : முன்பெல்லாம் பொழுதுபோக்கு என்றாலே அது தியேட்டரில் சென்று படம் பார்ப்பதாகத்தான் இருந்தது. ஆனால் 90-களின் பிற்பகுதியில் பெரும்பாலான வீடுகளுக்குள் தொலைக்காட்சி பெட்டிகள் புகுந்தன. பின்னர் மாறுபட்ட மெகா தொடர்களை ஒளிபரப்பி, இருந்த இடத்திலேயே சிறந்த பொழுதுபோக்கு முறைக்கு வழி வகுத்தன. இன்று பெண்கள் மட்டுமல்லாமல், ஆண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் சீரியல் பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது.

அந்த வகையில் தமிழ் ரசிகர்களுக்குப் பிடித்த சீரியல்களில் ‘செம்பருத்தி’யும் ஒன்று. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு முதல் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. காதல் பின்னணியை கொண்ட இத்தொடர், தெலுங்கில் வெளியான ‘முத்த மந்தாரம்’ என்ற தொடரை தழுவி எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் ஷபானாவும் நடித்து வருகிறார்கள்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஷபானா ஷாஜகான், பிறந்து, வளர்ந்தது எல்லாமே மும்பையில். அங்கு வசிக்கும் போது மலையாள சீரியலில் நடித்து, தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அதன் பிறகு தான் அவருக்கு தமிழ் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?

சிறு வயதிலிருந்தே, மாடலிங் மற்றும் நடனத்துறையில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த ஷபானா, எப்போதும் நடனம் ஆடிக் கொண்டே இருப்பாராம்.  வீட்டில் இருக்கும் போதெல்லாம் டான்ஸ் ஆடும் இவர், பள்ளி கலை விழாக்கள் ஒன்றைக் கூட விட்டு வைக்காமல் கலந்துக் கொள்வாராம். மேலும் ஹோட்டல்களில் கொண்டாடப்படும் பிறந்தநாள் விழாக்களில்  தொகுப்பாளராகவும் நடனக் கலைஞராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். நடிகையும் நடனக் கலைஞருமான ஷோபனாவை மிகவும் விரும்பும் ஷபானா அவரை சந்திக்க வேண்டும் என தீவிர ஆசையில் உள்ளாராம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Shabana shajahan sembaruthi parvathi zee tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X