/indian-express-tamil/media/media_files/2025/05/06/Qlec3kk2v0FFebO69OKr.jpg)
Shah Rukh Khan Met Gala
பாலிவுட் திரையுலகின் முடிசூடா மன்னன் ஷாருக்கான், நியூயார்க்கில் நடைபெற்ற புகழ்பெற்ற மெட் காலா (Met Gala) நிகழ்ச்சியில் முதன்முறையாகக் கலந்து கொண்டு தனது வருகையை ஒரு வரலாற்று நிகழ்வாக மாற்றினார். பிரபல ஆடை வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜியின் (Sabyasachi Mukherjee) கைவண்ணத்தில் உருவான கருப்பு நிற உடையில் ஷாருக்கான் மிகவும் கம்பீரமாகத் தோன்றினார்.
இந்த பாரம்பரிய மேற்கத்திய உடையில், இந்தியப் பாரம்பரியத்தின் சாயல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தனது தோற்றத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக, ஷாருக்கான் பலவிதமான வைர மோதிரங்களையும், லேயர் நகைகளையும் அணிந்திருந்தார். குறிப்பாக, அவர் அணிந்திருந்த பெரிய 'K' பெண்டண்ட், அவர் 'கிங் கான்' என்று அழைக்கப்படுவதற்கான மறைமுகக் குறிப்பாக இருக்கலாம் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், புலி உருவம் பொறிக்கப்பட்ட கைப்பிடியுடன் கூடிய ஒரு நேர்த்தியான கைத்தடியையும், கருப்பு நிறக் கண்ணாடியையும் அவர் அணிந்திருந்தது அவரது தோற்றத்திற்கு ஒரு தனித்துவமான கவர்ச்சியை அளித்தது.
இந்த உடை குறித்து சப்யசாச்சி முகர்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "ஷாருக் கான் டாஸ்மேனியாவின் மிக நுண்ணிய கம்பளியால் செய்யப்பட்ட, ஃப்ளோர் லென்த் கோட் அணிந்திருந்தார். அதில், அவரது தனித்துவமான முத்திரையுடன் கூடிய ஜப்பானிய கொம்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த ஒற்றை மார்பு கோட், கூரான காலர் மற்றும் அகலமான மடிப்புகளைக் கொண்டது. இதனுடன், க்ரேப் டி சைன் பட்டு சட்டை மற்றும் மிக நுண்ணிய வுல் டிரவுசர் ஆகியவை பொருத்தமாக இருந்தன.
ஷாருக் கானை உலகின் தலைசிறந்த சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் என்று புகழ்ந்த சப்யசாச்சி, "அவர் ஒரு சினிமா நாயகன். அவரது பிரம்மாண்டமான திரைப்படங்களும், வசீகரமான தோற்றமும் உலகளவில் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளன. கருப்பு நிற நேர்த்தியான ஆடைகள் மூலம் அவரது உலகளாவிய சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை வெளிப்படுத்துவதே எனது நோக்கம். பாரம்பரிய மேற்கத்திய ஆடைகளில், சப்யசாச்சியின் தனித்துவமான வேலைப்பாடுகளுடன் ஷாருக் கான் ஒரு மாயாஜாலக்காரர், சூப்பர் ஸ்டார் மற்றும் ஒரு அடையாளம். அவ்வளவுதான்." என்று கூறியுள்ளார்.
இந்த தோற்றம் இணையத்தில் வைரலாக பரவியது. ரசிகர்கள் அவரது அழகையும், ஆளுமையையும் புகழ்ந்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் அவரது உடை தேர்வை விமர்சித்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு மெட் காலா நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், கியாரா அத்வானி, இஷா அம்பானி, தில்ஜித் தோசன்ஜ், மோனா படேல் மற்றும் வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா உள்ளிட்ட பல இந்திய பிரபலங்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read in English: Shah Rukh Khan creates history as first Indian male actor to walk Met Gala carpet; keeps it classic in an all-black look and ‘K’ pendant
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us