பிரெட் வைத்து புதுவிதமான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். ஷாகி துக்கடா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பிரெட்- 6
மில்க்மெய்டு- 1 கப்
ஏலக்காய் தூள்- தேவையான அளவு
தேங்காய் தூள்- 1 கப்
முந்திரி, பாதாம், பிஸ்தா- தேவைக்கேற்ப
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் பாலை நன்றாக காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது அரை லிட்டர் பால் நன்றாக காய்ச்சி வற்றி வரும் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் தூள், பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து மில்க்மெய்டு, ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பிரெட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை நறுக்கி அதனை சப்பாத்தி போல் ஒவ்வொரு பிரெட் துண்டுகளையும் தேய்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பிரெட் துண்டுகளின் இடையில் நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள கலவையை வைத்து தேய்க்க வேண்டும். அதன் ஓரங்களை தண்ணீர் கொண்டு ஒட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் எண்ணெய் வைத்து சூடானதும் அதில் இந்த சப்பாத்தி போன்ற கலவையை போட்டு பொறித்து எடுக்க வேண்டும். அடுத்தாக இந்த ஷாகி துக்கடாக்களை ஒரு பிளேட்டில் வரிசையாக வைத்து அதில் நன்றாக காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்ற வேண்டும். அவ்வளவு தான் பாலோடு ஷாகி துக்கடா இஞ்சி சுவையாக இருக்கும். அப்படியே எடுத்து பரிமாறலாம். சுவை அள்ளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“