shakshi agarwal surprised biggboss cheran on his birthday - நெகிழ்ந்த சேரன் - வீடு தேடி சென்று சர்பிரைஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்
பிக்பாஸ் 3வது சீசனில், மக்களை அதிகம் கவர்ந்த போட்டியாளர்களில் ஒருவர் இயக்குனர் சேரன். வனிதாவின் அட்ராசிட்டிகளை மட்டும் தட்டிக் கேட்கவில்லை என்ற குறையைத் தவிர, இதர அனைத்து விஷயங்களிலும் இவருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் தான்.
Advertisment
குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது...
ஆனால், கடினமான டாஸ்க்குகளில் இவரால் தாக்குப்பிடிக்க முடியாததாலோ என்னவோ, மக்களின் ஆதரவு இருந்தும், சேரன் வெளியேற்றப்பட்டார். ஷெரீன், சாக்ஷி அகர்வால் லோஸ்லியா, அபிராமி ஆகியோர் சேரனிடம் மிகவும் நெருக்கமாக பழகினர்.
Advertisment
Advertisement
எப்போதும், காட்டாறு வெள்ளம் வரும் போது, 'எங்க வீட்டு குழாயில் தண்ணீ வந்துடுச்சு!' என்று சொன்னால் யாராவது கவனிப்பார்களா என்ன... அது போலத்தான், நேற்று (டிச.12) சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, சாமானிய ரசிகன் முதல் மீடியாக்கள் வரை ரஜினி வைத்து விவாதம் நடத்திக் கொண்டிருக்க, அந்த வெள்ளத்தில் சேரன் பிறந்தநாள் எனும் அடி பைப்பு தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டது.
சேரனுக்கும் டிசம்பர் 12 தான் பிறந்தநாள்.
இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர் சாக்ஷி அகர்வால், சேரனை வீடு தேடிச் சென்று அவருக்கு சர்பிரைஸ் கொடுத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.
We give surprises only to people who are close to our heart , So i made a surprise visit to #Cherappa 's house to celebrate his bday and his face reaction was #EPIC ????