Shaktimaan Mukesh Khanna what doing now - 'சக்திமான்' முகேஷ் கண்ணா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா? வீடியோ உள்ளே
சக்தி மான்.... சக்தி மான்.... சக்தி மான்....
Advertisment
அந்த டியூனோடு மூன்று முறை ரிப்பீட ஆகும் இந்த வரிகளை பாடும் பொழுது, இன்றும் வைப்ரேஷன் இருப்பதை 90's கிட்ஸால் உணர முடியும்... முடிகிறது.
முகேஷ் கண்ணா... இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ. சூப்பர் ஹீரோ என்பதைத் தாண்டி, இவரது முக வசீகரத்துக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது. சக்தி மானாக கையை மேலே உயர்த்தி, ஹை வோல்ட் பம்பரமாய் சுற்றிச் செல்லும் முகேஷுக்கு, விசில் அடிக்கப் பழகாத அந்த இளம் வயதிலேயே தொண்டை கிழிய கத்தி, கைகளைத் தட்டி கொண்டாடாதவர்கள் இருக்க முடியாது.
Advertisment
Advertisements
சக்திமான் பார்ப்பதற்காக, சனிக்கிழமை வந்தா ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு அடம் பிடிச்சு அட்ராசிட்டி செய்த இளசுகள், இன்று பல நிறுவனங்களில் மாபெரும் பொறுப்பில் இருப்பார்கள். இன்று அவர்களுக்கு தங்கள் சக்தி மான் என்ன செய்து கொண்டிருப்பார் என்று அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை.
அவர்களுக்காக இங்கே நமது சக்திமான்...
மும்பையைச் சேர்ந்த முகேஷ் கண்ணா, 1988-90 வரை தூர்தர்ஷனில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில் தான் முதன் முதலில் நடித்தார். அதில், நம்ம தலைவருக்கு பீஷ்மர் ரோல்.
பிறகு, அவர் நடித்து பெரும் ஹிட்டான தொடர் 'சந்திரகாந்தா' ஆகும். சீனியர் 90'ஸ் கிட்ஸ் இதை பார்த்திருக்க வாய்ப்புண்டு. பிறகு, மார்ஷல், சராப், யக், விஸ்வாஸ் என்று நடித்துக் கொண்டிருந்த முகேஷ் கண்ணா, துணிந்து எடுத்த முடிவு தான் சக்திமான்.
1997ம் ஆண்டு ஒளிபரப்பான சக்திமான் தொடரில் சூப்பர் ஹீரோவாக நடித்தது மட்டுமில்லாமல், அதை தயாரித்தும் இருந்தார்.
ஆனால், அதன் பிறகு இப்படியொரு உச்சத்துக்கு செல்வோம் என்று அவர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். நாடு முழுவதும் ரசிகர்கள் சக்திமானை ஆராதித்தர்கள். கடவுளாகவே வழிபட தொடங்கினார்கள். இன்னும் சிலரோ, சக்திமான் வந்து காப்பாற்றுவார் என்று முட்டாள்த்தனமான செயல்களில் ஈடுபடும் அளவுக்கு மக்களை கட்டிப் போட்டது இத்தொடர். 2005ம் ஆண்டு வரை சக்திமான் ஒளிபரப்பானது.
அதன்பிறகும், ஆர்யமான், தீவார் என்று பல தொடர்களில் முகேஷ் கண்ணா நடித்திருக்கிறார்.
நாடகத்தில் இவர் என்ட்ரி ஆனது என்னமோ 1988ல் தான். ஆனால், தலைவர் 1981ம் ஆண்டிலிருந்தே சினிமாவில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.
கடைசியாக 2014ம் ஆண்டு, மலையாள திரைப்படமான ராஜாதி ராஜாவில் முகேஷ் நடித்திருந்தார். இதுதான் அவர் நடித்த கடைசிப் படமாகும்.
அதன்பிறகு, இந்திய சிறுவர் திரைப்பட கழகத்தின் குழுத்தலைவராக பதவி வகித்து வந்த முகேஷ் கண்ணா மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகம் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று சொல்லி கடந்த 2018ம் அப்பதவியில் இருந்து விலகினர்.
தற்போது Bheeshm International எனும் பெயரில் யூடியூப் சேனல் தொடங்கி அதை ஏகபோகமாக நடத்தி வருகிறார் நம்ம சக்திமான்.
பொதுத் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதனை தன் வாழ்வில் நடந்த சம்பவங்களோடு கலந்து பேசி, சிங்கிள் வீடியோவுக்கு மில்லியன்களில் பார்வைகளை அள்ளி வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news