பொடுகு தொல்லை, முடி உதிர்வுக்கு ஒரே தீர்வு; சின்ன வெங்காயம் மட்டும் போதும்: இப்படி யூஸ் பண்ணுங்க!
பொடுகு தொல்லை மற்றும் முடி உதிர்வை போக்குவதற்கு சின்ன வெங்காயம் மட்டும் பயன்படுத்தி எப்படி ஹேர்பேக் தயாரிப்பது என்ற இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இது முடியின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
பொடுகு தொல்லை மற்றும் முடி உதிர்வை போக்குவதற்கு சின்ன வெங்காயம் மட்டும் பயன்படுத்தி எப்படி ஹேர்பேக் தயாரிப்பது என்ற இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இது முடியின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும் முடி உதிர்வை சமாளிப்பது பெரும் சவாலாக இருக்கிறது. முடி உதிர்வை அழகியல் சார்ந்தது என்று கருதாமல், ஆரோக்கியம் தொடர்புடையதாக நினைக்க வேண்டியது அவசியம் ஆகும்.
Advertisment
வயோதிகத்தை குறிக்கும் வகையில் இருந்த முடி உதிர்வு பிரச்சனை, தற்போது இளம் பருவத்தினர் இடையே அதிகரித்துக் காணப்படுகிறது. உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், ஒருவர் செய்யும் வேலையின் தன்மை, தூக்கமின்மை, பொடுகு தொல்லை என்று வெவ்வேறு காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது.
உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தை சீரமைத்து சரியான உறக்கம் இருந்தால் பெரும்பாலும் முடி உதிர்வு பிரச்சனையை கட்டுப்படுத்தி விடலாம். எனினும், பொடுகு தொல்லை காரணமாக முடி உதிர்வு இருந்தால், அதற்காக சில பராமரிப்பு முறையை பின்பற்ற வேண்டும்.
இதற்காக விலை உயர்ந்த ஷம்பு, சீரம் போன்றவற்றை வாங்கி பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும், பியூட்டி பார்லருக்கும் சென்று சிகிச்சை பெற வேண்டியதில்லை. பொடுகை போக்கி, முடி உதிர்வை குறைக்க நம் வீட்டிலேயே சிம்பிளான ஹேர்பேக் தயாரித்து பயன்படுத்தலாம். குறிப்பாக, சின்ன வெங்காயம் மட்டும் இதற்கு போதுமானதாக இருக்கும்.
Advertisment
Advertisements
அந்த வகையில், சுமார் 10 முதல் 15 சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்து, அதன் சாறை மட்டும் தனியாக வடிகட்டி எடுக்க வேண்டும். முடியின் வேர்ப்பகுதி அதிக வறட்சியாக இருப்பவர்கள் மட்டும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றை நன்றாக கலக்கினால் ஹேர்பேக் தயாராகி விடும்.
இந்த ஹேர்பேக்கை தலையில் தேய்த்து விட்டு சுமார் 15 நிமிடங்களுக்கு பின்னர் குளித்து விடலாம். இவ்வாறு வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்தால் பொடுகு தொல்லை நீங்கி, முடி உதிர்வு கட்டுப்படுத்தப்படும். இதில் இரசாயனங்கள் எதுவும் சேர்க்காததால், ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் சாத்தியக் கூறுகளும் இல்லை. முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் சின்ன வெங்காயத்தில் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி - Food and Glow Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.