இன்றைய தலைமுறையின் பெரிய பிரச்சனை முடி உதிர்வாக இருக்குறது. இதற்கு சிலர் ஆயிரக்கணக்காக பணம் செலவளித்து ஹேர் ஆயில், ஷம்பூ உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர். இதற்கான மூலப்பொருள்களில் அதிகளவில் சின்ன வெங்காயத்தின் சத்துகள் நிறைந்திருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சின்ன வெங்காயம் பயன்படுத்துவதால் முடிக்கு தேவையான சத்துகள் கிடைப்பதாகவும், இவை முடி உதிர்வை கட்டுப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. கூடுதலாக, இவை இளநரை பிரச்சனையை சரி செய்வதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த சின்ன வெங்காயத்தை கொண்டு எப்படி ஹேர் பேக் செய்வது என காணலாம்.
இந்த ஹேர் பேக் செய்வதற்கு சின்ன வெங்காயம் மற்றும் தேங்காய் எண்ணெய் இருந்தாலே போதும். சுமார் 10 முதல் 15 சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்த பின்னர், அவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். அதன்பின்னர், அரைத்து எடுத்த வெங்காயத்தின் சாறை மட்டும் வடிகட்ட வேண்டும்.
இந்த வெங்காய சாறுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்தால் நமக்கான ஹேர் பேக் தயாராகி விடும். இதை தலையில் தேய்த்து சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முடி உதிர்வு மற்றும் பொடுகு பிரச்சனை குறையத் தொடங்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.