Sharanya Turadi about VJ Chitra Tamil News : பிரபலங்கள் யூடியூப் சேனல் ஆரம்பித்த வரிசையில் சமீபத்தில் செய்தி வாசிப்பாளராக தன் திரைப் பயணத்தைத் தொடங்கிய சரண்யா துராடி இணைந்துள்ளார். அனைவர்க்கும் உபயோகமாகும் அதேவேளையில் என்டெர்டெயின் ஆகும் Vlog காணொளிகளை அப்லோட் செய்து வரும் சரண்யா, தற்போது தன்னுடைய டச் அப் பேக்கின் உள்ளே இருக்கும் பொருள்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் மறைந்த சின்னதிரை நடிகை சித்ரா அவருக்காக வாங்கிக்கொடுத்த சில பொருள்களைப் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
"திரைப்படங்களைவிட சின்னதிரை தொடர்களில் நடிப்பவர்கள் எப்போதுமே எந்நேரமும் ஃப்ரெஷாகவே இருப்பார்கள். அது எப்படி என்றுதான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம். என்னுடைய டச் அப் பேக்கை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்வது பேபிம்மா. நான் எங்குச் சென்றாலும், இந்த பேக்கை கூடவே சுமந்துகொண்டு வருவார். அப்படி என்னதான் இந்த பேகில் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
Advertisment
Advertisements
நடிகைகளுக்குக் கண்கள் சம்பந்தப்பட்ட மேக்-அப் பொருள்கள்தான் அவசியம். அதிலும், ஏராளமான அழுகை காட்சிகள் இருக்கும் என்பதால் கண்களைப் பராமரிப்பதற்கான டிராப்ஸ் கூட வேண்டும். என்னிடம் எல்லா விதமான காஜல் பொருள்களும் உண்டு. அதிலும் வாட்டர் ப்ரூஃப் காஜல் அடுக்கிவைத்திருக்கிறேன். பொதுவாக சீரியலில் டார்க் மற்றும் பிரைட் நிற லிப்ஸ்டிக் பயன்படுத்துவார்கள். ஆனால், எனக்கு எப்போதுமே லைட் நிறங்கள்தான் பிடிக்கும். அதைத்தான் அதிகம் பயன்படுத்துவேன்.
மேக்-அப் பொருள்களை மாற்றி உபயோகித்தாலும், பயன்படுத்தப்படும் ப்ரஷ் நமக்கானதாக இருக்கவேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் மற்றவர்களுடைய பிரஷை பயன்படுத்தக்கூடாது. அதேபோல பயன்படுத்திய பிறகு, அதனை முழுமையாக சுத்தம் செய்யவேண்டும்.
இதுதான் என்னுடைய ஃபவுண்டேஷன் பேக்" என்று சொல்லும்போதே குரல் வலுவிழந்தது. "எனக்கு மேக்-அப் பற்றியெல்லாம் அவ்வளவு அறிவு இல்லை. அப்போதுதான் சித்து இதை துபாய் ஏர்போர்ட்டில் வாங்கிக்கொடுத்தா. எங்க ரெண்டு பேருடைய ஸ்கின் டோன் ஒன்றுதான். அதனால், அவ என்னவெல்லாம் வாங்கினாலோ, எல்லாவற்றையும் எனக்கும் வாங்கி கொடுத்தா. அவ கொடுத்த பொருளெல்லாம் இருக்கு ஆனா அவ இல்ல" என்றபடி மனமுடைந்து அழுதார் சரண்யா. மேலும் அந்தப் பொருள்கள் எதையும் உபயோகிப்பதும் இல்லை என்றும் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil