scorecardresearch

மாயமில்லை மந்திரமில்லை.. நானே செய்த முதல் கேக்! – சரண்யா துராடி லவ்லி வீடியோ!

Sharanya Turadi Cake Making Latest Youtube Video இதற்கிடையில், ஏராளமான கவுன்ட்டர்கள். ஒருவழியாக கேக் ரெடியாகி, அதனை டேஸ்ட் செய்தும் பார்த்தனர்.

Sharanya Turadi Cake Making Latest Youtube Video
Sharanya Turadi Cake Making Latest Youtube Video

Sharanya Turadi Cake Making Latest Youtube Video : சோவென பெய்யும் மழையைப் பார்த்தபடி நம்மிடம், “இன்னிக்கு ஏன் மழை இப்படிப் பெய்கிறது தெரியுமா? ஏன்னா நான் இன்னிக்கு சமைக்கப் போறேன்!” என்ற இன்ட்ரோவோடு தன்னுடைய இந்த முதல் கேக் காணொளியைத் தொடங்கினார் சின்னத்திரை நடிகை சரண்யா துராடி. ஆம், தன் வாழ்க்கையிலேயே முதல் முறையாகச் சமைக்கப் போகிறார் சரண்யா. அந்த சமையல் அட்ராசிட்டியை முழுவதும் படம் பிடித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார். எப்படி சமைத்திருந்தார் பார்க்கலாமா?

பயத்தை நேருக்கு நேராக சந்திக்கத் தயாராகக் களத்தில் இறங்கினார் சரண்யா. தன்னை சுற்றி உள்ளவர்கள் அனைவர்க்கும் கேக் செய்ய தெரியும் ஆனால், தனக்கு தெரியாது என்பதால் அதனைக் கற்றுக்கொண்டு செய்யப் போகிறார். இதற்காக கேக் செய்வதில் எக்ஸ்பெர்ட்டான தன்னுடைய ரசிகர் ஒருவரின் வீட்டிற்கே சென்றார் சரண்யா.

வீட்டை அடைந்ததும் பலத்த வரவேற்பு பெற, உடனடியாக கேக் செய்யும் வேலையைத் தொடங்கினார். ஆனால், அதற்கு முன்பு சரண்யாவின் நெருங்கிய தோழியான நடிகை ஸ்யமந்தா அவருடன் இணைந்துகொண்டார். தன்னுடைய வருங்கால கணவர் ராகுலின் பிறந்தநாள் வருவதால், அவருக்காக ரெட் வெல்வெட் கேக் செய்து கொடுக்கலாம் என்று நினைத்தவர், அதனை நம்முடன் செய்து காட்டவும் தயாரானார்.

ரெட் வெல்வெட் கேக் செய்யத் தேவையான பொருள்களை எல்லாம் சேர்த்து, நீண்ட நாள் உபயோகிக்க வேண்டும் என்று நினைத்திருந்த பீட்டர் மெஷினை வைத்து பெரிய போராட்டத்திற்குப் பிறகு கேக் கலவையைத் தயார் செய்தார் சரண்யா. பிறகு அதனைத் தட்டில் கொட்டி, லெவல் செய்து ஓவனில் வைத்தார். இதற்கிடையில், ஏராளமான கவுன்ட்டர்கள். ஒருவழியாக கேக் ரெடியாகி, அதனை டேஸ்ட் செய்தும் பார்த்தனர்.

அடுத்தது க்ரீம் அப்லை செய்வதுதான். அதற்கு ஸ்யமந்தவும் இணைந்துகொண்டார். இருவருடைய அட்ராசிட்டிகள் தாங்க முடியவில்லை. இறுதியாக கேக் மேல், க்ரீம் அப்ளை செய்து, பூக்கள் வைத்து, இரண்டு இதய வடிவ ஸ்பிரிங்கில் ஆகியவற்றைச் சேர்த்து அழகான கேக்கை செய்து முடித்தார். என்னதான் காசு கொடுத்து வாங்கி பொருள்கள்  பரிசளித்தாலும்,தன் கையால் செய்த கேக்கை கொடுக்கும்போது ஸ்பெஷலாக உணர்வதாக கூறிவிட்டு காணொளியை நிறைவு செய்தார் சரண்யா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Sharanya turadi cake making latest youtube video