ஷேரிங் இஸ் கேரிங், ஆனால் டூத் பிரஷ் விஷயத்தில், இந்த பழமொழி உண்மையாக இருக்காது. உங்கள் துணையுடன் டூத் பிரஷ் பகிர்ந்து கொள்வது பாதிப்பில்லாததாகத் தோன்றினாலும், இது உண்மையில் ஆபத்தான நடைமுறையாகும், இது கடுமையான உடல்நல தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
உங்கள் வாயில் நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்கள் உள்ளன. நீங்கள் டூத் பிரஷ் பகிர்ந்து கொள்ளும்போது, இந்த பாக்டீரியாக்களை உங்கள் துணையுடன் பரிமாறிக் கொள்கிறீர்கள் என்று டாக்டர் நிஷா தக்கர் விளக்கினார். (Cosmetic dentist at Dr Karishma Aesthetics)
இது பாதிப்பில்லாததாக தோன்றினாலும், உங்கள் துணையுடன் டூத் பிரஷ் பகிர்ந்துகொள்வது உங்கள் வாய் ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்தலாம்.
நீங்கள் ஏன் டூத் பிரஷ் பகிரக்கூடாது?
டூத் பிரஷ் ஈறு நோய், கேவிட்டி மற்றும் இன்னும் தீவிரமான நோய்த்தொற்றுகளுக்கு காரணமான பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளன.
பல்வேறு நோய்த்தொற்றுகள் மற்றும் பல் சிதைவுக்கு காரணமான தீங்கு விளைவிக்கும்- ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் பாக்டீரியா – டூத் பிரஷ்களில் இருக்கலாம். எனவே, நீங்கள் டூத் பிரஷை பகிர்ந்து கொள்ளும்போது, உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சில வாய்வழி பாக்டீரியாக்கள், நிமோனியா போன்ற தொற்று நோய்களுக்கு வழிவகுக்கும். டூத் பிரஷ் பகிர்வது இந்த பாக்டீரியாக்களைப் பரப்பும் அபாயத்தை அதிகரிக்கும்.
ஜலதோஷம் அல்லது காய்ச்சல் போன்ற சில வைரஸ்கள், உமிழ்நீர் மூலம் பரவும். டூத் பிரஷை பகிர்வது இந்த வைரஸ்களை உங்கள் துணைக்கு அனுப்பும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.
சில சமயங்களில் பல் துலக்கும் போது ஈறுகளில் ரத்தம் கசியும், அது கவனிக்கப்படாமல் இருக்கும், மேலும் நாம் ஒருவருடன் டூத் பிரஷ் பகிரும் போது எச்ஐவி மற்றும் ஹெபடைடிஸ் பி போன்ற ரத்த ஓட்ட நோய்களும் பரவக்கூடும் என்று டாக்டர் தக்கர் குறிப்பிட்டார்.
எனவே உகந்த வாய் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வழக்கமான பல் பரிசோதனைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்
உங்கள் வாயில் பாக்டீரியா சுமையை குறைக்க தொடர்ந்து பிரஷிங், ஃபிளாசிங் மற்றும் மவுத் வாஷிங் ஆகியவற்றை ஊக்குவிக்கவும். தனிப்பட்ட வாய்வழி பராமரிப்புக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், உங்களையும் உங்கள் துணையையும் ஆரோக்கிய அபாயங்களிலிருந்து பாதுகாக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“