சசிதரூர் தனக்கு இட்லி மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதை சமூகவலைதளத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.
இட்லியில் நல்ல ஆரோக்கியமான சத்துகள் உள்ளது. காலையில் இட்லி சாப்பிடுவதால், நான் உத்வேகத்துடன் செயல்படுகிறேன் என்று அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் சுவையான இட்லிக்காக, ரெசிபியை பகிர்ந்துள்ளார்.
தேவையான பொருட்கள்
1 கப் அரிசி
½ கப் உளுந்து
உப்பு
எண்ணெய்
1 டேபிள் ஸ்பூன் தயிர்
1 டேபிள் ஸ்பூன் சீரகம்
1 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
2 கப் தண்ணீர்
செய்முறௌ : அரிசி மற்றும் உளுந்தை இரவு முழுவதும் ஊறவைக்கவும். இதை அடுத்த நாள் அரைத்து கொள்ள வேண்டும். தொடர்ந்து உப்பு சேர்த்து 24 மணி நேரம் புளிக்க வைக்கவும். தொடர்ந்து இதில் தயிர், சீரகம், வெந்தயம், தண்ணீர் சேர்த்து கிளரவும். இட்லி பாத்திரத்தில் மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“