ஷவர்மா மற்றும் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மருத்துவர் ஆதித்யன் குகன் அளித்த சிறப்பு நேர்காணல் இங்கே…
நாமக்கல் மாவட்டத்தில் உணவகம் ஒன்றில், ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தார்.
இதையடுத்து தமிழகத்தில் ஒரே நாளில், 1,187 கடைகளில் நடந்த சோதனையில், தரமற்ற இறைச்சி வைத்திருந்த கடைகளுக்கு, 1.61 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
குறிப்பாக, ஆடு, மாடு இறைச்சி வேக வைப்பதற்கு, வெகு நேரம் ஆகும். கோழி இறைச்சியை சிறிது நேரத்தில் சமைக்க முடியும். அதிலிருந்து தயாரிக்கப்படும் ஷவர்மா முறையாக வேக வைக்கப்படாமல், பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான உணவாக மாறுகிறது.
இதுதொடர்பாக மருத்துவர் ஆதித்யன் குகன் கூறுகையில், ஷவர்மா சாப்பிடும் போது சிலருக்கு இன்பெக்சன், அலர்ஜி ஏற்படுகிறது.
ஷவர்மா கறி ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு அளவில் வெப்பமாகப்படுகிறது.
இதை தயாரிக்கும் போது கையுறையை தண்ணீரில் மட்டுமே கழுவி வருகிறார்கள். சரியாக கையுறை கழுவா விட்டால் அதில் பாக்டீரியா இருக்கும், இதனால் பாதிப்பு வரும். அதில் சேர்க்கப்படும் பொருட்கள் தரமானதாக உள்ளதா என பார்க்க வேண்டும்.
5 ஸ்டார் ஹோட்டல்களில் என்னென்ன பொருட்கள் அலர்ஜி உள்ளது என மெனு கார்டு வைத்து இருப்பார்கள்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எதையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என பார்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு ஷவர்மா சாப்பிடுவதால் பல்வேறு பாதிக்க பாதிப்புகள் உண்டாகிறது. அதே போல சோடியம் உப்பு சாப்பிடுவதால் 30 வயதில் ரத்த அழுத்தம், இதய அடைப்பு, உடல் பருமன் வருகிறது.
ஜங்க் ஃபுட் குழந்தைகளுக்கு கொடுக்கவேக் கூடாது.
வெளிநாட்டில் இட்லி, கூட்டு, பொரியல் அனைத்தும் நல்லது என கூறி வரும் நிலையில் நமது அடுத்த தலைமுறை, பாரம்பரிய உணவுகளை மறந்து உடலுக்கும், மனதிற்கும் பாரம் ஏற்படுத்தும் உணவுகளை தேடிச் சென்று உண்ணுவது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகின்றது
எனவே நம் அனைவரும் உட்கொள்ளும் உணவு, உடலுக்கு வலுவை தரக்கூடிய, உபாதை இல்லாத உணவாக இருந்தால் நோய் இல்லாத வாழ்க்கையை கடந்து செல்லலாம் என மருத்துவர் தெரிவித்தார்.
குறிப்பு: உணவு பாதுகாப்பு துறையில், இறைச்சியை எப்படி பதப்படுத்த வேண்டும் என்ற பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு, 200 ரூபாய் கட்டணம் செலுத்தி, ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“