‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ஷெரின். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார்.
சமீபத்த்தில் ஷெரின் தனது பிறந்தநாளை கோவாவுக்கு சென்று கொண்டாடினார். அப்போது எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிந்துள்ளார்.
இங்கே பாருங்க
கோவா ஸ்பெஷல்
இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியான கொங்கனில் அமைந்துள்ளது கோவா மாநிலம். இது இந்தியாவின் மிகச் சிறிய மாநிலமாகும். சுமார் 450 ஆண்டு காலம் போர்ச்சுக்கீசியர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த இந்த மாநிலத்தின் கலாச்சாரம் போர்ச்சுக்கீசியர்களின் பழக்க வழக்கங்களை நினைவூட்டுவதாக அமைந்திருக்கும்.
கோவா கேண்டலிம் பகுதியில் கலங்கூட், பாகா, கேண்டலிம் என்று மொத்தம் 3 கடற்கரைகள் இருக்கின்றன. இங்கு நீர் விளையாட்டுக்களில் பொழுதை கழிக்கலாம். பாகா கடற்கரையில் அமைந்துள்ள பிரிட்டோஸ் என்ற அழகான குடில்கள், அஞ்சுனா கடற்கரை இங்கு மிகவும் புகழ் பெற்றவை. கோவாவின் தெற்கு பகுதியில் கடற்கரையோரம் அமைந்த அழகான தேவாலயங்கள் சிறப்பு வாய்ந்தவை
விடுமுறையை இனிதாகக் கழிக்க விரும்புவோருக்கும், கடற்கரை விரும்பிகளுக்கும் நிச்சயம் கோவா உங்களுக்கு சிறந்த சுற்றுலா தலமாக அமையும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“