Shilpa Shetty Kundra Beauty Secrets Tamil News : அட! இவங்களுக்கு 45 வயசா?!’ என்று ஷில்பா ஷெட்டியைக் கண்டு ஆச்சரியப்படாதவர்கள் யாருமில்லை. இவர் நடித்த எந்தக் காலத்துத் திரைப்படங்களைப் பார்த்தாலும், ஒரேபோன்ற உடலமைப்பு மட்டுமல்ல முகமலர்ச்சியும் இருக்கும். அப்படி என்னதான் இவருடைய அழகின் ரகசியம்? அவரே பகிர்ந்திருக்கிறார்.

1993-ம் ஆண்டு ‘பாஸிகர்’ எனும் பாலிவுட் திரைப்படம் மூலம் அறிமுகமான ஷில்பா ஷெட்டி, தமிழில் பிரபு தேவாவோடு மிஸ்டர் ரோமியோ மற்றும் விஜயோடு குஷி ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பிற்கு மட்டுமல்ல இவருடைய நடனத்திற்கு மட்டுமே ஏராளமான ரசிகர்கள் உண்டு. மேலும், மாடல், தொழிலதிபர், தயாரிப்பாளர் என பன்முகமும் இவருக்கு உண்டு.

2009-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி தொழிலதிபரான ராஜ் குந்த்ராவை திருமணம் செய்துகொண்டார் ஷில்பா. இவர்கள் இருவருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். திரைப்படங்களில் அவ்வளவாக தலைகாட்டாவிட்டாலும், சோஷியல் மீடியாவில் ஷில்பா படுபிஸி. சமையலில் அதிக ஈடுபாடுள்ள ஷில்பா, அவ்வப்போது தன்னுடைய ரெசிபிக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்வார். மேலும், மக்களுக்குப் பயனுள்ள வகையில் சில அழகுக் குறிப்புகளையும் பகிர்வதுண்டு.

அந்த வரிசையில், பெண்களுக்கான ஓர் பிரத்தியேக அழகு குறிப்பை தன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறார் ஷில்பா ஷெட்டி. அந்தப் பதிவில், தான் தினமும் தியானம் செய்து உடலையும் மனதையும் வலுப்படுத்திக்கொள்வதாகக் குறிப்பிடும் அவர் தன் உடல் தசைகளை இருக்கமாக இருக்க உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம் என்றும் குறிப்பிடுகிறார்.
View this post on Instagram
அதுமட்டுமின்றி, முகப்பொலிவுக்கு எந்த விதமான சோப்பையும் பயன்படுத்த மாட்டாராம். முழுக்க முழுக்க இயற்கைப் பொருள்களை மட்டுமே உபயோகிக்கும் பழக்கமுடைய ஷில்பா, மேக் அப்பை கலைப்பதற்குக் கூட தேங்காய் எண்ணெய்யைத்தான் பயன்படுத்துவார். மேலும், தான் என்ன சாப்பிட்டாலும் தினமும் நிச்சயம் ஒரு கிளாஸ் கற்றாழை ஜூஸ் குடிப்பது வழக்கமாம். என்னதான் செயற்கைப் பொருள்களை வெளிப்புறத் தோற்றத்திற்குப் பயன்படுத்தினாலும், இயற்கை அழகைப் பாதுகாப்பது இயற்கைப் பொருள்கள் மட்டுமே!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“