Shilpa Shetty Healthy Fruit Cake Recipe Tamil News : இந்த கிறிஸ்துமஸிற்குச் சுவையான பழ கேக் செய்ய நீங்கள் தவறவிட்டாலும், ஏமாற்றமடைய வேண்டாம். அதற்கு பதிலாக, ஆரோக்கியமான புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அசத்தலான கேக் செய்யலாம். ஆரோக்கியமான மற்றும் எளிதான பழ கேக் ரெசிபியை தேடுகிறார்களானால், ஷில்பா ஷெட்டி குந்த்ராவின் சூப்பர் ரெசிபி இங்கே உள்ளது.
ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவில், சர்க்கரை இல்லாத, மாவு இல்லாத ஆரோக்கியமான பழ கேக்கை, ரவை அல்லது சூஜியால் தயாரிக்கப்பட்டு அதன்மேல் உலர் பழங்களுடன் அலங்கரிக்கப்பட்ட சுவையான கேக் செய்முறையைப் பகிர்ந்துள்ளார்.
தேவையான பொருட்கள்
ரவை (சூஜி) - ¾ கப்
இஞ்சி தூள் - 1 தேக்கரண்டி
கலப்பு பழச்சாறுகளில் ஊறவைத்த கலந்த உலர்ந்த பழங்கள் - 1 கப்
நறுக்கிய பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள்
செய்முறை
*ஒரு பாத்திரத்தில், ரவை, இஞ்சி தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
*ஊறவைத்த கலந்த உலர்ந்த பழங்களை ஒரு பாத்திரத்தில் கொட்டவும். இதனோடு, உலர்ந்த பொருட்களைச் சேர்த்து நன்கு கலந்து கேக் மாவு செய்துகொள்ளவும்.
*ஒரு பேக்கிங் தட்டில் எண்ணெய் தடவி கிரீஸ் செய்து, அதன்மேல் முழு கோதுமை மாவைத் தூவி விடவும். பிறகு, அதில் கேக் மாவை ஊற்றவும். நறுக்கிய பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகளையும் சேர்த்துக்கொள்ளவும்.
*180 டிகிரி செல்சியஸில் preheated ஓவனில் 45 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும்.
*கேக் தயாரானதும், அதனைக் குளிர வைத்து துண்டுகளாக நறுக்கவும். புதிதாகத் தயாரிக்கப்பட்ட ஜாம் சாஸை கேக் துண்டுகள் மீது தடவி சாப்பிடலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"