Advertisment

ப்பா.. 42 வயசுல என்னமா யோகா பண்றாங்க ஷில்பா ஷெட்டி!

Vrischikasana: ஆண்டுகள் தோலை சுருக்கலாம் (நான் நன்றாக இருக்கிறேன்), ஆனால் உற்சாகத்தை கைவிடுவது என் ஆத்மாவை சுருக்கிவிடும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shilpa Shetty vrischikasana

ஷில்பா ஷெட்டி

Shilpa Shetty: யோகா ஆர்வலரான நடிகை ஷில்பா ஷெட்டி குந்த்ரா, இன்ஸ்டாகிராமில் தனது சமீபத்திய உடற்பயிற்சி வீடியோவில், மிகவும் கடினமான ஒன்றாகக் கருதப்படும் ’விருச்சிகாசனா’ எனும் ’தேள் போஸ்’ பயிற்சியை வெளியிட்டிருக்கிறார்.

Advertisment

‘ஜேம்ஸ் ப்ராட்டன் கூறியது போல்,“என்னில் உள்ள குழந்தைக்கு இன்னும் வயதாகவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” 42 வயதில் அட்வான்ஸ் யோகா கற்றுக் கொள்ள தொடங்கியுள்ளேன். எனக்கு எப்போதுமே விருச்சிகாசனாவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கு காலம் கடக்கவில்லை என்பதை நான் நம்புகிறேன். ஆண்டுகள் தோலை சுருக்கலாம் (நான் நன்றாக இருக்கிறேன்), ஆனால் உற்சாகத்தை கைவிடுவது என் ஆத்மாவை சுருக்கிவிடும்… அது இல்லாமல் என்னால் வாழ முடியாது. வாழ்வதை நிறுத்தும்போது தான் நமக்கு வயதாகும்…ஒருபோதும் விட்டுக் கொடுக்காதீர்கள். புதிதாக ஒன்றை முயற்சிக்கவும். ’ எனவும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் ஷில்பா.

விருச்சிகாசனம் என்றால்?

ஆசனத்தை செய்பவரின் கால், தேளின் வளைந்த வால் போல் இருப்பதால், இதற்கு விருச்சிகாசனா என்று பெயர் வந்தது. இவற்றை முன்கைகள், அல்லது ஹேண்ட்ஸ்டாண்ட் நிலை என இரு வழிகளில் செய்யலாம்.

எப்படி செய்வது?

டால்பின் போஸ் அல்லது கீழே பார்க்கும் நாயைப் போன்ற போஸை செட் செய்துக் கொள்ளுங்கள். இதில் உங்களது எடை முழுவதும், கைகள், கால்கள் மற்றும் முன் கைகளால் தாங்கப்படும்.

இரண்டு எண்ணிக்கையில் மூச்சை உள்ளிழுத்து விட்டு, உங்கள் வலது காலை முடிந்தவரை மேல் நோக்கி உயர்த்தவும் (மூன்று காலை மேலே தூக்கி விட்டு, கீழே பார்க்கும் நாய் போஸ்)

இப்போது மெதுவாக உங்களது இடது காலையும் மேலே உயர்த்தவும். இப்போது உங்களின் எடை முழுவதையும் உங்கள் கைகள் தாங்கிப் பிடித்திருப்பதை உணர்ந்திருப்பீர்கள்.

நீங்கள் பேலன்ஸாக இருப்பதை மீண்டும் உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் முதுகை படிப்படியாக வளைத்து, இரு கால்களையும் உங்களால் முடிந்தவரை தலைக்கு அருகில் கொண்டு வர முயற்சிக்கவும். உதவிக்காக முழங்கால்களை வளைக்கலாம்.

சமநிலையை நீங்கள் உறுதிப்படுத்தியதுடன், முன்னால் பார்த்து, உங்கள் பார்வையை ஒரு புள்ளியில் செலுத்துங்கள்.

இந்த போஸில் மூன்று முறை மூச்சை இழுத்து விட்டுவிட்டு மீண்டும் அதனை செய்யவும்.

விருச்சிகாசனாவின் பலன்கள்

இந்த ஆசனம் முதுகெலும்பு, தோள்கள், கைகள் மற்றும் உடலை வலுப்படுத்துவதோடு, உடலுக்கு சமநிலையையும் ஃப்ளெக்ஸிபிலிட்டியையும் தருகிறது. தவிர ஸ்டமினாவையும், சகிப்புத் தன்மையையும் தருகிறது. மூளைக்கு புதிய ரத்தத்தைப் பாய்ச்சி, மெமரி மற்றும் கவனத்தை மேம்படுத்துகிறது. அதோடு உச்சந்தலையில் உள்ள மயிர்க்கால்களைத் தூண்டுகிறது. தோள்கள் மற்றும் முதுகெலும்புகளில் சேரக்கூடிய ஸ்ட்ரெஸ்ஸை வெளியிட்டு, மனதிற்கும் உடலுக்கும் நல்லதொரு ரிலாக்ஸேஷனையும் இந்த விருச்சிகாசனம் தருகிறது.

Yoga Shilpa Shetty
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment