Shilpa Shetty : யார் தான் வயதாகாமல், இளமையாக இருக்க விரும்ப மாட்டார்கள். வயதாகும் போது எலும்புகள் சிதைவடைவதால் மக்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அப்படி வயதாகும் போது அவர்களின் தோற்றம் மற்றும் நடையில் மாற்றம் ஏற்படுவது பொதுவான ஒன்று.
ஆரோக்கியமான உணவைத் தவிர, வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளுக்கு வலுவான உடற்பயிற்சியும் அவசியம். ஆகவே, நீங்கள் 30 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடிகையும் உடற்பயிற்சி ஆர்வலருமான ஷில்பா ஷெட்டி குந்த்ரா உங்களுக்கு சில உடற்பயிற்சி டிப்ஸ்களை தருகிறார். அவர் இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் உடற்பயிற்சி வீடியோ பலருக்கும் உபயோகப்படலாம்.
அந்த வீடியோவைப் பதிவிட்டு, “ஃபிட்டாக இருப்பதும், அதை அன்புக்குரியவர்களைச் செய்ய ஊக்குவிப்பதும் ஒருவர் தரக்கூடிய சிறந்த பரிசு. நாம் ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்ததும், நம் உடல் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருக்க வேண்டிய வேலைகள் செய்வதை தவிர்த்து விடுகிறோம். இந்த உடற்பயிற்சி வழக்கம் மிகவும் எளிமையானது. உங்கள் முழங்கால்கள், கால்கள் மற்றும் குளுட்டிகளுக்கு சிறந்தது. மற்றும் உங்கள் உடலின் வலிமை, ஃப்ளெக்ஸிபிளிட்டியை அதிகரிக்கும். முதலில் 5 சுற்றுகளுடன் இந்த பயிற்சியை தொடங்கலாம். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையை அதிகரிக்கலாம்” என்று கூறியிருக்கிறார் ஷில்பா.
அதோடு உடற்பயிற்சி வீடியோவில், “இவை நம் அன்றாட வாழ்க்கையில் செய்யாத இயக்கங்கள். 35 வயதிற்குப் பிறகு இடுப்பு எலும்புகளை வலுப்படுத்த இது ஓர் சிறந்த பயிற்சி” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் முன் பாதங்களை தரையில் ஊன்றி, கால்கள், முட்டி ஆகியவை வலிமை பெற சில நொடி நில்லுங்கள்.
முட்டியை மெதுவாக கீழிறக்கி வஜ்ராசனா போஸில் உட்காருங்கள்.
மேலே மெதுவாக எழுந்து குதிகால்களை தரையில் வையுங்கள்.
நன்றாக நில்லுங்கள்.
இதனை குறைந்தது 5 முறையாவது தொடர்ந்து செய்யுங்கள்.
இடுப்பு தசை பயிற்சியான இது கர்ப்பபை, சிறுநீர்ப்பை மற்றும் குடலின் கீழ் உள்ள தசைகளை வலுப்படுத்த உதவும். சிறுநீர் கசிவு அல்லது குடல் கட்டுப்பாட்டில் சிக்கல் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் உதவும். எங்கும் எந்த நேரத்திலும் செய்யலாம். மென்மையான உடற்பயிற்சியான இது, சிறுநீர்ப்பை கசிவுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Shilpha shetty kundra pelvic floor exercise
‘நடமாடும் நகைக்கடை’ தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா?
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!