By: WebDesk
Updated: September 30, 2020, 09:07:00 PM
shivangi vijay tv shivangi super singer shivangi krish
shivangi vijay tv shivangi super singer shivangi krish : விஜய் டிவியில் சக்கை போடு போட்ட நிகழ்ச்சிகள் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி, இந்த 2 நிகழ்ச்சிகளிலும் தனக்கென தனி ஃபேன்ஸ் ஃபாலோவை ஏற்படுத்திக் கொண்டவர் நம்ம சிம்ம குரல் சிங்காரி ஷிவாங்கி.
முழுக்க முழுக்க இசை குடும்பத்தில் இருந்து வந்தவர் ஷிவாங்கி. இவரின் அம்மா சந்திரமுகி படத்தில் “ராரா… சரசுக்கு ராரா” பாடலை பாடிய பின்னி கிருஷ்ண குமார், தந்தை சங்கீத வித்வான் கிருஷ்ணன். முழுக்க முழுக்க கேரளா பின்னணி கொண்ட ஷிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தான் முதன் முதலாக கலந்துக் கொண்டார். அதற்கு முன்பு தனது தாயுடன் சேர்ந்து இசை கச்சேரிகளில் பாடிக் கொண்டிருந்தார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு குக் வித் கோமாளி ஷிவாங்கிக்கு மிகப் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. அதில் கலக்க போவது பாலா, புகழ் ஷிவாங்கியை கலாய்ப்பது. அதற்கு சளைக்காமல் ஷிவாங்கி அவர்களை ஓட்டுவது என செம்ம கலகலப்பான குக் ஷோ இதுதான்.சில மாதங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. டைட்டிலை வனிதா விஜயகுமார் வென்றிருந்தார். ரம்யா பாண்டியன் ரன்னராக வென்றார். நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் வித விதமான டைட்டில் வழங்கப்பட்டது. அதில் ஷிவாங்கிக்கு சிம்ம குரல் சிங்காரி டைட்டில் வழங்கப்பட்டது.
அந்த டைட்டில் வாங்கிய போது ஷிவாங்கி எமோஷனலாக சில வரிகளை பதிவு செய்தார். “ இது உன்னுடைய உண்மையான குரல் இல்லை, இது என்று பலவிதமாக கிண்டல் செய்திருக்கிறார்கள். ஆனால், இது தான் என்னுடைய உண்மையான குரல். இது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. ஆனால், இன்று இந்த குரல் எனக்கு ஒரு விருதினை பெற்றுக் கொடுத்து உள்ளது” இதனைக் கேட்ட சக போட்டியாளர்களும் கண் கலங்கினார்.
இப்போது ஷிவாங்கி பயங்கர பிஸி. யூடியூப்பில் புகழ் உடன் சேர்ந்து சமையல் வீடியோ என கலக்குகிறார். அதுமட்டுமில்லை இசை கச்சேரிகளிலும் ஷிவாங்கிக்கு வாய்ப்புக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. மழலை குரல் மாறாத ஷிவாங்கியை பலருக்கும் பிடிக்க தொடங்கிவிட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil