பகல் நிலவு ஷிவானிக்கு இத்தனை வயசா? நம்ப முடியலையே…

Pagal Nilavu Shivani Narayanan : டப்ஸ் மாஸ், டிக் டாக் என்று சமூக வலைதளங்களில் பிஸியாக இருந்ததால் தான், அவருக்கு சீரியலில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்ததாம்.

By: November 27, 2019, 2:54:03 PM

Serial Actress Shivani Narayanan :  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய தொடர்களில் “பகல் நிலவு” சீரியலும் ஒன்று. அந்த சீரியலில் அசீம் – ஷிவானி, அர்ஜூன் – சிநேகா என்ற முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர். அந்த சீரியல் முடிந்த பிறகு, மீண்டும் அசீம் – ஷிவானியின் நடிப்பில் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற தொடர் ஒளிபரப்பப்பட்டது.

Shivani Narayanan photos ஷிவானி நாராயணன்

பகல் நிலவு தொடரில் நடித்த முன்னணி ஜோடிகள் அழுத்தம் காரணமாக அந்த சீரியலில் இருந்து வெளியேறினர். அதனால் அசீம் – ஷிவானிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக ஒளிபரப்பப்பட்ட கடைக்குட்டி சிங்கம் சீரியலில் முன்னணி கதாபாத்திரமாக இடம் பெற்றார் ஷிவானி. ஆனால் என்ன காரணமோ, சீரியல் தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே, அதிலிருந்து வெளியேறினார். தற்போது ஜி தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘இரட்டை ரோஜா’ என்ற சீரியலில், அனு, அபி என இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் ஷிவானி.

Shivani Narayanan photos ஷிவானி நாராயணன்

பார்ப்பதற்கு வட இந்திய பெண் போன்று இருக்கும் இவரின் சொந்த ஊர் சாத்தூர். அப்பா நாராயணன், அம்மா அகிலா நாராயணன். 5-ம் வகுப்பு வரை சாத்தூரில் படித்த ஷிவானி, அதன் பிறகு சென்னைக்கு குடி பெயர்ந்திருக்கிறார். டப்ஸ் மாஸ், டிக் டாக் என்று சமூக வலைதளங்களில் பிஸியாக இருந்ததால் தான், அவருக்கு சீரியலில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்ததாம்.

Shivani Narayanan photos ஷிவானி நாராயணன்

தற்போது நடிகையான பிறகு, அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது படங்களை வெளியிட்டு வருகிறார். இவரின் வயது என்னவென்று தெரிந்தால், ஆச்சர்யப்படுவீர்கள். ஆம்! ஷிவானி 2001-ம் வருடம் பிறந்தவராம். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் குறிப்பிட்டிருக்கிறார். அப்படிப் பார்த்தால் இப்போது தான் ஷிவானிக்கு 18 வயதாகிறது!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Shivani narayanan pagal nilavu rettai roja

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X