New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/New-Project56.jpg)
Shivin Ganesan
Shivin Ganesan
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் அறிமுகமானவர் ஷிவின் கணேசன். இவர் திருநங்கை ஆவார். மாடல் மற்றும் ஐ.டி ஊழியரான ஷிவின் மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இந்தியா 2021 பட்டத்தை வென்றவர். ஸ்பெயினில் நடைபெற்ற மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் 2022 போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏராளமானவர்கள் ரசிகர்கள் ஆகினர். காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரது குணம் பலருக்கும் பிடித்தது. தன்னை பற்றி தவறாக பேசினாலும் அதை பாசிட்டிவ் ஆக பார்த்த குணம் பலரையும் ஈர்த்தது. இதன் காரணமாகவே ரசிகர்கள் பட்டாளம் சேர்ந்தது.
இந்தநிலையில், ஷிவின் கணேசன் சமீபத்திய போட்டோ ஷூட் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் விமர்சனங்களும் எழுந்துள்ளன. கிளாமராக உடை அணிந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ பதிவிட்டிருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்த நிலையில் ஷிவின் அதற்கு பதிலளித்துள்ளார்.
ரசிகர் ஒருவர், "பிக் பாஸ் நிகழ்ச்சியில் சமூகம், குடும்பத்தினர் உங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தீர்கள், நாங்கள் உங்களை குடும்பத்தில் ஒருவராக பார்க்கிறோம். ஆனால் நீங்கள் இப்படி உடை அணியும் போது உங்களை ரோல் மாடலாக எடுத்துக் கொண்ட பலரையும் பற்றி யோசியுங்கள். எனினும் இது உங்கள் வாழ்க்கை. ஒரு சகோதரராக இதை நான் சொல்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்" என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஷிவின், "தவறாக எடுத்துக் கொள்ள எதுவும் இல்லை என்றால் உங்கள் பாசத்திற்கும், மரியாதைக்கும் நன்றி அண்ணா. நான் என் வேலையை செய்கிறேன். இந்த உலகம் பெரியது. நான் அணிகிற உடையை விட கற்றுக் கொள்ள நிறைய உள்ளது. நான் ஒருவரை ரோல் மாடலாக எடுத்துக் கொள்கிறேன் என்றால் நான் அவர்களின் எண்ணங்களை தான் பார்ப்பேன். உடைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. உடையை வைத்து ஜட்ஜ் பண்ணாதீங்க" என்று பதிலளித்து உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.