நாம் எந்த நிறம் ஆனாலும் நிறத்தில் இல்லை அழகு - நம்மிடம் உள்ள தன்னம்பிக்கையில் தான் நம் நிறங்களில் அழகு உள்ளது என சின்னத்திரை நட்சத்திரம் சைத்ரா ரெட்டி நெகிழ்ச்சி.
கூடிய விரைவில் முக்கியமான கதாபாத்திரத்தில் சின்னத்திலிருந்து வெள்ளித்திரையில் கால் பதிக்கப்போவதாக பிரபல சின்னத்திரை மற்றும் திரைப்பட நட்சத்திரம் சைத்ரா ரெட்டி கோவையில் பேட்டி.சர்வதேச தரத்திலான அழகுக்கலை நிபுணர் பயிற்சியை வழங்கும் லாக்மே அகாடமி கோவையின்
புதிய கிளையைபிரபல சின்னத்திரை நட்சத்திரம் சைத்ரா ரெட்டி பங்கேற்று திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அழகு சாதனங்களைக் கையாளுதல் குறித்து சைத்ரா ரெட்டி கூறியதாவது.
தென்னிந்திய அளவில் எங்கும் இல்லாத அளவுக்கு அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் தொடங்கப்பட்டுள்ள லாக்மே அகாடாமி பயிற்சி மையத்தில் அழகு சாதனங்களைக் கையாளுதல் - சிறப்பு சருமப் பராமரிப்பு, முடி அலங்காரம் மற்றும் பராமரிப்பு, ஒப்பனைக் கலை, நகங்கள் சீரமைப்பு மற்றும் அழகுபடுத்தல், உடல்நலன் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் சர்வதேச தரத்திலான பயிற்சிகள் அளிக்கப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும்.
அழகுக்கலையில் தலைசிறந்த பயிற்சியாளர்களுடன் செயல்படும் இந்த அகாடாமியில் பயிற்சி பெறுவோர் நவீன அழகுக்கலை மையங்கள், ஃபேஷன் போட்டோ - ஷூட் நிறுவனங்களில் மட்டுமின்றி - மணப்பெண் மற்றும் மணமகன் அலங்காரம், சினிமா, சின்னத்திரை மற்றும் சமூகவலைதளப் பிரபலங்களுக்கான தனித்துவ அலங்காரம் (செலிபிரிட்டி ஸ்டைலிஷ்ட் - மேக்அப் ஆர்டிஸ்ட்) மூலம் சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெற முடியும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.
மேலும் தனக்கு மேக்கப் குறித்து பெரிதாக தெரியாது ஆனால் என்னுடைய சருமத்திற்கு எது தேவைப்படுகிறதோ அதை சரியான முறையில் மேக்கப்பில் தேர்ந்தெடுத்துக் கொள்வேன்.
செய்தி: பி.ரஹ்மான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“