காலை வெறும் வயிற்றில் வாழைப்பழம் உண்பது நல்லதா?

ரத்தத்தில் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு சமநிலையில் இருக்காது

By: February 24, 2019, 5:01:51 PM

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதை தவிர்த்து, நம்மாளுங்க மற்ற அயிட்டங்களை உள்ளே தள்ளிக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக, வாழைப்பழம்.. உண்மையில் வாழப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா? கொஞ்சம் டீட்டெயிலா பார்ப்போம்,

வாழைப்பழம் பொட்டாசியம், ஃபைபர் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்களின் சிறந்த ஆதாரமாக இருக்கிறது. இது உங்கள் ஆற்றலை அதிகரித்து பசியைக் குறைக்கிறது. வாழைப்பழத்தில் 25 சதவீதம் சக்கரை அடங்கியுள்ளது. இது இரும்பு, டிரிப்டோபான், வைட்டமின் பி 6 மற்றும் வைட்டமின் பி ஆகிய மற்ற ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது சிறந்தது தான். ஆனால், காலையில் வெறும் வயிற்றில் இதனை சாப்பிடக் கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.

ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வது என்ன?

வாழைப்பழங்களில் இயற்கையாகவே அமிலங்கள் உள்ளன. மேலும் அவற்றில் அதிக அளவு பொட்டாசியம் அடங்கியுள்ளது. இவை காலையில் உண்ண சிறந்தது தான். ஆனால் வெறும் வயிற்றில் சாப்பிட சிறந்ததல்ல. இதை ஆப்பிள் மற்றும் பிற பழங்களுடன் கலந்து சாப்பிவது, வாழைப்பழத்தில் உள்ள அமிலங்களை குறைக்க உதவுகிறது.

அதேபோல், வாழைப்பழத்தில் அதிக அளவில் மக்னீசியம் உள்ளது. வெறும் வயிற்றில் வாழைப்பழத்தைச் சாப்பிடும்போது, அதில் இருக்கும் மக்னீசியம், ரத்தத்தில் சேரும். ரத்தத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகரிக்கும். ஆக, ரத்தத்தில் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு சமநிலையில் இருக்காது. இது, இதயத்தை பாதிப்புக்குள்ளாக்கிவிடும்; இதய நோய்களை வரவழைத்துவிடும்.

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

ஆயுர்வேதத்தின் படி ஒருவர் வெறும் வயிற்றில் எந்த ஒரு பழத்தையும் சாப்பிடுவது சிறந்ததல்ல. மேலும் இப்போது கிடைக்கும் பழங்கள் எதுவும் இயற்கையான பழங்களாக இருப்பதில்லை. நாம் செயற்கையாக வளர்க்கப்பட்ட பழங்களையே சாப்பிடுகிறோம்.

இதில் உள்ள கேமிக்கல்கள் நமது உடலுக்கு சிறந்ததல்ல. நாம் நினைப்பதை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. பிற பழங்களுடன் கலந்து சாப்பிடுவது சிறந்தது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Should we eat bananas on an empty stomach

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X