வெண்டைக்காயில் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் அதிகம். வாரத்திற்கு 2 முறை வெண்டைக்காய் சாப்பிட்டால், அதிக நன்மைகள் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், இன்சுலின் செயல்பாட்டை சீராக வைக்கவும் உதவுகிறது. வெண்டைக்காயில் பைட்டோ நியூட்ரீயன்ஸ் உள்ளது இவை ரத்த சர்க்கரை அளவை குறைத்து, இன்சுலின் அளவை சீராக்கி ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கும் உதவுகிறது.
இந்நிலையில் வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள்: வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் போலேட் உள்ளது. இவை ஒட்டுமொத்தமாக நமது ஆரோக்கியத்திற்கு உதவும் சத்துக்கள்.
இதில் உள்ள நார்சத்து ஜீரணத்தை ஊக்குவிக்கிறது. இதனால் மலச்சிக்கல் குறைய உதவுகிறது. மேலும் நார்சத்து வயிறு நிறையும் தன்மை கொடுக்கிறது. மேலும் உடல் எடையை சீராக வைத்துகொள்ளவும் உதவுகிறது.
இதில் உள்ள நார்சத்து, நமது ஜீரண மண்டலம் சுகரை மெதுவாக உள்வாகிக்கொள்ள உதவுகிறது. மேலும் சுகர் அளவை கட்டுப்படுத்துவதுடன் அது ஏற்படும் சாத்தியங்களையும் குறைக்கிறது.
இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதில் உள்ள பொட்டாஷியம் ரத்த அழுத்த அளவை குறைக்கிறது.
இதில் வைட்டமின் ஏ உள்ளதால், நல்ல பார்வையை பாதுகாக்க உதவுகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டால் கண் தொடர்பான பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். நல்ல கண் பார்வையை கொடுக்க உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“