நமது சருமத்தை பொலிவாக்க மஞ்சள், உருளைக்கிழங்கு, சந்தனம் உள்ளிட்டவற்றில் ஸ்கிரப் தயாரித்து அதை பயன்படுத்துவோம். இந்நிலையில், நாம் பேரிச்சம்பழத்தில் ஸ்கிரப் செய்துகூட சருமத்திற்கு பயன்படுத்தலாம்.
இதற்கு நாம் பேரிச்சம்பழத்தை இரவு முழுவதும் பாலில் ஊறவைத்து. அதை தயிர் அல்லது க்ரீமில் சேர்த்து அரைத்துகொள்ளவும். கூடுதலாக இதில் எலுமிச்சை சாறை சேர்த்து நாம் முகத்திற்கு ஸ்கிரப்பாக பயன்படுத்தலாம்.
பேரிச்சம்பழத்தில் வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் உள்ளது. இது சருமத்திற்கு தேவையான விஷயத்தை வழங்கும். பாலில் நல்ல தோலை மிரதுவாக்கும் தன்மை கொண்டது.
இந்நிலையில் நாம் இதை நன்றாக மசாஜ் செய்துதான் முகத்தை கழுவ வேண்டும். இப்படி மசாஜ் செய்வதால் உடலில் உள்ள இறந்த செல்கள் நீங்கும். இதனால் உங்களுக்கு பொலிவு கிடைக்கும்.
பேரிச்சம்பழத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் முன்கூட்டியே வயதாவதை தடுக்கும். மேலும் இது வீக்கத்தை குறைக்கும். எலுமிச்சை சாறில் அசிடிட்டி தன்மை சிலரின் சருமத்திற்கு ஒத்துவராமல் இருந்தால், இதை பயன்படுத்த வேண்டும். மேலும் சருமத்தில் ஏதேனும் ஏக்ஸிமா போன்ற தொல்லை இருந்தால் இதை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“