பெரும்பாலானோர் சந்திக்கும் பொதுவான உடல்நலப் பிரச்சனைகளில் ஒன்று தோள்பட்டை வலி. கையில் தோன்றும் வலியும், தோள்பட்டையில் வரும் வலியும் நாள்பட நீடிப்பதற்கு முக்கியக் காரணம், ஒரே நிலையில் நீண்ட நேரம் இருப்பதுதான். நமது வாழ்க்கை முறை, மொபைல் போன், லேப்டாப், கணினி பயன்பாடு மற்றும் நாள் முழுவதும் ஒரே மாதிரியான செயல்பாடுகள் ஆகியவை இந்தப் பிரச்சனைக்கு வழிவகுக்கின்றன.
Advertisment
பெக்டாரலிஸ் மைனர் தசை (Pectoralis Minor Muscle)
தோள்பட்டை வலிக்கு மிக முக்கியக் காரணம், பெக்டாரலிஸ் மைனர் எனப்படும் தசையில் ஏற்படும் இறுக்கம். இந்தத் தசையானது இரண்டாவது, மூன்றாவது, நான்காவது விலா எலும்புகளில் தொடங்கி மேலே தோள்பட்டை நோக்கிச் செல்கிறது. நாம் கூன் விழுந்து அமரும்போதோ அல்லது குனிந்தபடி வேலை செய்யும்போதோ, இந்தத் தசை இறுக்கமடைந்து, தோள்பட்டையின் அசைவுகளைப் பாதிக்கிறது.
உதாரணமாக, நீங்கள் கூன் போட்டுக்கொண்டு கையை மேலே தூக்க முயற்சித்தால், முழுமையாகத் தூக்க முடியாது. இதற்கு காரணம், கூன் போடுவதால் ஸ்கேப்லா (தோள்பட்டை எலும்பு) முன்னோக்கித் திரும்பியிருப்பதுதான். உங்கள் தோள்பட்டை நேராக இருந்தால், கையை முழுமையாக மேலே உயர்த்த முடியும்.
வலி ஏன் நீண்ட காலம் நீடிக்கிறது?
Advertisment
Advertisements
இந்த பெக்டாரலிஸ் மைனர் தசை இறுக்கமடைந்து, அக்ரோமியன் பிராசஸ் (Acromion Process) என்ற எலும்பில் உள்ள கிரேட்டர் டியூபர்கிள் (Greater Tubercle) பகுதியைத் தாக்க ஆரம்பிக்கும். இவ்வாறு அடிக்கடி இடிப்பதால், டெண்டினைடிஸ் (Tendinitis) எனப்படும் தசைநாண் அழற்சி உருவாகிறது. இதனால் வலி அவ்வளவு சீக்கிரம் குணமாகாது. பின்னர் பிசியோதெரபி, உடற்பயிற்சிகள், மசாஜ், அக்குபஞ்சர், ட்ரை நீடிலிங் போன்ற சிகிச்சைகள் தேவைப்படும்.
இந்தத் தோள்பட்டை வலியிலிருந்து விடுபட சில எளிய வழிகள் உள்ளன:
ஸ்ட்ரெச்சிங்: தோள்பட்டைக்கு முன்னால் உள்ள தசைகளை அடிக்கடி பின்னோக்கியோ அல்லது பக்கவாட்டிலோ நீட்டிப் பயிற்சி செய்யுங்கள்.
நேரான நிலை: உங்கள் ஸ்கேப்லா எலும்பை (தோள்பட்டை எலும்பு) நேராக வைத்திருக்கப் பழகுங்கள்.
20 நிமிட விதி: கணினி அல்லது லேப்டாப்பில் வேலை செய்பவர்கள் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை சும்மா ஒருமுறை தோள்களைப் பின்னோக்கி அசைத்துப் பயிற்சி செய்யலாம்.
இது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று தோன்றலாம். ஆனால், இந்த எளிய பயிற்சிகளைச் செய்வதன் மூலம் தோள்பட்டை வலியின் தீவிரத்தைக் குறைத்து, நாள்பட குணமாகாமல் போகும் பிரச்சனையைத் தடுக்கலாம்.