ஸ்ரேயா அஞ்சன், சித்து சித் இருவரும் சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து, இன்று ரியல் ஜோடியாகளாக உள்ளனர். கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் சித்து சித் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இருவரும் ஜோடியாக நடித்தனர். இந்த சீரியலில் இருவருக்கும் இருந்த கெமிஸ்ட்ரி, ரசிகர்களைக் பெரிதும் கவர்ந்தது.
தற்போது, சித்து விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஸ்ரேயா, ஜீ தமிழ் டிவியில் ரஜினி சீரியலில் நடிக்கிறார். ஸ்ரேயா அஞ்சன் ஏற்கெனவே அன்புடன் குஷி, அரண்மனை, நந்தினி உள்ளிட்ட சீரியல்களில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார்.
சித்து, ஸ்ரேயா இருவரும் அடிக்கடி தங்கள் புகைப்படங்கள், வீடியோஸ், ரீல்ஸ்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் ஸ்ரேயாவை பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில் ஸ்ரேயா சமீபத்திய இன்ஸ்டா வீடியோ அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
இப்போது பல டிவி பிரபலங்கள் மாலத்தீவுக்கு டூர் செல்வது ஃபேஷனாகி விட்டது. அந்தவகையில் ஸ்ரேயாவும், சித்துவும் சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அங்கு கோகோ ரெசார்ட், போட்டிங், கடலில் குளியல், டின்னர் பார்டி என விடுமுறையை ஜாலியாக என்ஜாய் செய்துள்ளனர். மேலும் சித்து பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரேயா நிறைய சர்பிரைஸூம் கொடுத்துள்ளார். அந்த வீடியோவை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த சித்து, ஓய் பொண்டாட்டி இதுதான் எப்போதும் என்னோட சிறந்த பிறந்தநாள். இந்த நாளை ஸ்பெஷலாக மாற்றியதற்கு உனக்கு என் நன்றி. உன் இதயம் அன்பும் பாசமும் நிறைந்தது. உன் கைகள் எப்போதும் அக்கறையுடன் இருக்கும்.
உன்னை என் மனைவியாகக் கொடுத்ததற்காக என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன், ஒவ்வொரு முறையும் உன் கணவனாக நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை நீ எனக்கு உணர்த்துகிறாய்
என்னுடைய வாழ்க்கையில் நீ ஒளி ஏற்றினாய்
இருட்டில் என் சூரிய ஒளி நீ
நான் உன்னை காதலிக்கிறேன் என் அன்பு மனைவியே என்று அதில் எழுதியுள்ளார்.
பலரும் அந்த வீடியோவை லைக் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“