ஸ்ரேயா அஞ்சன் –சித்து சித், தமிழ் டிவி சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து, இன்று ரியல் ஜோடியாகளாக உள்ளனர்.
கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் சித்து சித் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இருவரும் ஜோடியாக நடித்தனர்.
இந்த சீரியலில் நடிகர் சித்து சித், சந்தோஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஸ்ரேயா ஜனனி கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த சீரியலில் இருவருக்கும் இருந்த கெமிஸ்ட்ரி, ரசிகர்களைக் பெரிதும் கவர்ந்தது.
தற்போது, சித்து விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
ராஜா ராணி சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஸ்ரேயா, ஜீ தமிழ் டிவியில் ரஜினி சீரியலில் நடிக்கிறார்.
நடிகை ஸ்ரேயா அஞ்சன் ஏற்கெனவே அன்புடன் குஷி, அரண்மனை, நந்தினி உள்ளிட்ட சீரியல்களில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார்.
சித்து, ஸ்ரேயா இருவரும் அடிக்கடி தங்கள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.
கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் ஸ்ரேயாவை பின்தொடர்கின்றனர்.
அதேபோல, சித்துவை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்
சித்து, ஸ்ரேயா இருவரும் அடிக்கடி அவர்களின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். அவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“