தமிழில் ‘ஸ்ரீ’ படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஷ்ருதிகா. அதற்கு பிறகு ஆல்பம், தித்திக்குதே, நள தமயந்தி போன்ற படங்களில் நடித்தார்.
இவர் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். ஷ்ருதிகா அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு ஆரவ் என்ற மகன் இருக்கிறான்.
சமீபத்தில் ஷ்ருதிகா தன் கணவர் மற்றும் மகனுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றார். அங்கு பிரான்ஸ் நாட்டில் மொனாக்கோ, கேன்ஸ், இத்தாலியில் சான் ரெமோ, செக் குடியரசு ப்ராக், ஹங்கேரி நாட்டின் ஜென்டென்ரே, புடாபெஸ்ட் ஆகிய இடங்களில் சுற்றிப் பார்த்தபோது எடுத்த புகைப்படங்கள், வீடியோஸை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இங்கே பாருங்க
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“