By: WebDesk
Updated: September 15, 2020, 01:43:05 PM
shrutika instagram shrutika arjun
shrutika instagram shrutika arjun : போதும் போதும் என்ற அளவுக்கு நடிகை ஸ்ருதிகாவின் பேட்டி இணையத்தை புரட்டி போட்டு வருகிறது. இதுவரை பார்த்திடாத வகையில், அவரின் இன்ஸ்டா புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. இவ்வளவு சீக்கிரமா சினிமாவை விட்டு போயிட்டு, ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க ஸ்ருது என்ற கேள்வி தான் இன்றையை இளைஞர்கள் மத்தியில்.
2002ஆம் ஆண்டு வெளியான சூர்யாவின் ஸ்ரீ படத்தில் நடித்தவர் ஸ்ருதிகா. அந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ருதிகா.அடுத்தடுத்து தமிழில் ஆல்பம், நள தமயந்தி, தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்தார்.
ஸ்வப்னம் கொண்டு துலாபாரம் என்ற மலையாள படத்திலும் நடித்தார் ஸ்ருதிகா. நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான ஸ்ருதிகா, நடிகர் யோகியின் கஸின் ஆவார். நடிப்பு வராததால் சினிமாவுக்கு முழுக்கு போட்ட ஸ்ருதிகா அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
அவருக்கு ஆரவ் என்ற மகன் உள்ளார். தற்போது 34 வயதாகிறது ஸ்ருதிகாவுக்கு. இந்நிலையில் திடீரென சமூக வலைதளங்களில் அவரது போட்டோக்கள் வைரலாகி வருகிறது. அதற்கு காரணம் அவரது மகன் தான். சமீபத்தில் அவர், இன்ஸ்டாவில் போட்ட புகைப்படம் தான் மீண்டும் ஸ்ருதிகாவை அறிமுகம் செய்து வைத்தது இணையத்திற்கு.
அதன் பின்பு, யூடியூப் சேனல்களில் அவரின் பேட்டி குவிந்து வருகிறது. ரியல் லைஃப் ஜெனிலியா, ஹாசினி என புகழ்ந்து தள்ளுகிறார்கள். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள ஸ்ருதிகா அடிக்கடி தனது கணவர், மகன் மற்றும் தோழிகளுடன் ஊர் சுற்றும் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். இவ்வளவு பெரிய மகனுக்கு தாயான போதும் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஸ்ரீயில் பார்த்த அதே இளமையுடன்தான் உள்ளார் ஸ்ருதிகா.
எஸ்ஆர்எம் கல்லூரியில் விஸ்காம் முடித்த இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை அதனால் தற்போது இவருக்கு வயது 33 ஆகிய நிலையில் இன்னும் ஹீரோயின் போல அப்படியேதான் இருக்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil