/indian-express-tamil/media/media_files/73ruDoiTPdHkSGYJuGKE.jpg)
Shrutika Arjun
சினிமா நட்சத்திரங்கள் என்றாலே பளபளப்பான சருமமும், எந்த குறையுமில்லாத முகமும் தான் நினைவுக்கு வரும். ஆனால், நடிகை ஸ்ருதிகா தனது இளமைக்காலத்தில் பிம்பிள்ஸ் பிரச்சனையால் அவதிப்பட்டதாகவும், அதற்கு தனது அம்மா கொடுத்த பாரம்பரிய வைத்தியமே கைகொடுத்ததாகவும் ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார்.
ஸ்ருதிகா கூறுகையில், "எனக்கு பிம்பிள்ஸ் வந்தா அம்மா வேப்பிலை அரைச்சு போடுவாங்க! ஆனா அந்த நேரத்துல என் அம்மா என்னை எந்த டெர்மட்டாலஜிஸ்ட்டும் போக விடல. நான் படங்கள் பண்றேன்னு சொல்லும்போதும் கூட, ஐப்ரோஸ் எடுக்க விடல. நீங்க என் படங்களைப் பார்த்தீங்கன்னா, என் ஐப்ரோஸ் கொஞ்சம் திக்காகவே இருக்கும். 'அட்லீஸ்ட் வேக்சிங் பண்ண விடு, ரொம்ப கேவலமா இருக்கும்'னு நான் சொல்லுவேன். அந்த அளவுக்கு அம்மா ரொம்ப கண்டிப்பு. 'பிம்பிள் வந்தாலும் தொடாதே'ன்னு சொல்லுவாங்க."
"எனக்கு MBA படிக்கும்போது நிறைய பிம்பிள்ஸ் இருந்தது. அப்பவும் அம்மா என்ன பண்ணுவாங்கன்னா, வேப்பிலையை மிக்ஸில போட மாட்டாங்க. அம்மிக்கல்லுல போட்டு இழைச்சு, அதை முகத்துல பூசிட்டு தூங்க சொல்லுவாங்க. என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் டெர்மட்டாலஜிஸ்ட் கிட்ட போயி பிம்பிள்ஸ் சரியாயிடுச்சுன்னு சொல்லுவேன். அப்போ அம்மா, 'சில சமயம் மார்க் எல்லாம் தங்கிடும். வேண்டாம், இப்போதைக்கு நீ ரொம்ப சின்னப் பொண்ணு. உன் ஸ்கின் தொடாதே' 'ன்னு சொல்லுவாங்க."
'குறைவே நிறைவு'
"என்னைப் பொறுத்தவரை, சரும பராமரிப்பு என்று வரும்போது 'குறைவே நிறைவு' (Less is More) என்பதுதான் என் தாரக மந்திரம். கொஞ்சமாகப் பயன்படுத்துவதுதான் சிறந்தது" என்று ஸ்ருதிகா தனது சருமப் பராமரிப்பு ரகசியத்தை பகிர்ந்துகொள்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.