தேன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி சித்த மருத்துவர் சிவராமன் கூறுகிறார். பல்வேறு வகை தேன் உள்ளதாகவும், மருத்துவ குணங்கள் இருப்பதாகவும் கூறிய அவர் இவர்கள் தேன் சாப்பிடக் கூடாது என்றும் கூறினார்.
Advertisment
யூடியூப் சேனலுக்கு அவர் பேசிய வீடியோவில், தேனில் 240 விதமான சத்துக்கள் உள்ளன. சர்க்கரையில் இல்லாத சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோய் இல்லாதவர்கள் வெள்ளை சர்க்கரை சாப்பிடாமல் தேன் சாப்பிடலாம். ஆனால் சர்க்கரை நோய் இருந்தால் கவனமாக சாப்பிட வேண்டும். சர்க்கரை நோய் இருக்கும் போது Glycimicload and Glycimic index இரண்டும் தேவை. கட்டுப்பாடுள்ள சர்க்கரை நோய் இருந்தால் தேன் கவனமாக சாப்பிடலாம்.
மற்றபடி குழந்தைகளுக்கு தேன் தாராளமாக கொடுக்கலாம். இனிப்பாக இதை கொடுக்கலாம். இங்குள்ள தேன் மற்ற நாடுகளை விட சிறப்பு தான். ஒரே மாதிரி தேன் வாங்காமல் வெள்ளை நிறம் உடைய வெப்பாழை தேன், கசப்பு சுவை கொண்ட வேப்பம் பூ தேன், ரப்பர் தேன் வாங்கலாம். தேனில் நிறைய மருத்துவ குணங்கள்உள்ளது. காயத்தை சரி செய்யும், புற்று நோயை குணப்படுத்துவதற்கு கூட பயன்படுத்துவதாக ஆய்வில் கூறியுள்ளனர். அன்றாடம் தேன் என்று கூறினார்.