Advertisment

இட்லி சிறந்த உணவு... ஆனால் 45 வயதுக்கு மேல்? மருத்துவர் சிவராமன் கூறும் காலை உணவு என்ன?

45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இட்லியை வாரத்தில் 1 முறை எடுக்க வேண்டும் என்றும் அதற்கான காரணத்தையும் மருத்துவர் சிவராமன் கூறினார்.

author-image
WebDesk
New Update
IDLI

சித்த மருத்துவர் கு.சிவராமன் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும், யூடியூப் பக்கத்திலும் இதுபற்றி பேசி வருகிறார். சிறுதானிய உணவு, பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவத்தை அவர் கூறி வருகிறார். 

Advertisment

அந்த வகையில், அவர் ஒரு வீடியோ பதிவில் இட்லி சாப்பிடுவது பற்றியும், சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றையும் அவர் கூறியுள்ளார். அதில், "சித்த மருத்துவர் கு.சிவராமன் சீன அதிபர் இந்தியா வந்த போது தமிழ்நாட்டின் மாமல்லபுரத்திற்கு வந்திருந்தார்.  சீன அதிபரம், பிரதமர் மோடியும் மாமல்லபுரத்தை சுற்றிப் பார்த்தனர். அப்போது அவர்களின் உணவு பட்டியலில் முதலில்  இருந்தது கருப்புகவுனி அரிசி. அது சீன அதிபர் சாப்பிடக்கூடியது. பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது.

காலை உணவு நம்மில் பெரும்பாலும் இட்லி, தோசை, சாம்பார், பொங்கல், வடை, மசால் தோசை சாப்பிடுகிறோம். இட்லி சிறந்த உணவு தான் ஆனால் 45 வயதுக்கு மேல் ஆனவர்கள் இட்லி, தோசையை வாரத்தில் ஒரு முறை சாப்பிடலாம். இவர்கள்  45 வயதுக்கு மேற்பட்டவர்கள் காலை உணவாக முளைகட்டிய பயிர், ஊறவைத்த துண்டல், கொண்டக்கடலை, முட்டை, பால் பன்னீர், கொஞ்சம் பாதாம் சாப்பிடலாம். 

காலை உணவை இப்படி சாப்பிட்டால் தான் சர்க்கரையை கட்டுப்படுத்த முடியும். சர்க்கரை வராமலும் தடுக்க முடியும். இது ரொம்ப ரொம்ப  முக்கியம். தமிழகத்தில் 1 கோடி பேர் சர்க்கரை நோய் உள்ளவர்கள் என ஆய்வு சொல்கிறது. இதில் 10% பேர் தான் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். 90% பேர் அதை சரியாக கவனிக்காமல் உள்ளனர்.  

கட்டுப்பாட்டில்லாத சர்க்கரையால் பிற பாதிப்புகள் மாரடைப்பு, புற்றுநோய், சிறுநீரக கோளாறு வர அதிக வாய்ப்பு உள்ளது. இங்கு தான் நாம் எச்சரிக்கையாகவும், நம் மரபை திரும்பி பார்க்க வேண்டிய நேரமாகவும் உள்ளது" என்று கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment