தோல் அழற்சி எனப்படும் சொரியாஸிஸ் உள்ளவர்கள் என்ன சாப்பிட வேண்டும்? என்ன சாப்பிடக் கூடாது? என்பதை சித்த மருத்துவர் சிவராமன் விளக்கியுள்ளார்.
Advertisment
தமிழ் ஸ்பீச் பாக்ஸ் என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவின்படி, சொரியாஸிஸை தமிழில் காளஞ்சக படை என்று கூறுவர். சொரியாஸிஸ் நோய் ஏற்படுவதற்கான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை. எனவே குணப்படுத்துவதும் சவாலாக உள்ளது. சொரியாஸிஸ் நோய்க்கு மன அழுத்தம் காரணமாக கூறப்படுகிறது.
அதேநேரம் சித்த மருத்துவம் இதனை கட்டுப்படுத்த முடியும். இதற்கு சில உணவுக் கட்டுப்பாடுகள் அவசியம். அதிக புளிப்புச் சுவையுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். எலுமிச்சை, ஆரஞ்சு, கமலா ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
நல்ல இனிப்பு உள்ள மாதுளம் பழம் சாப்பிடலாம். மாதுளையில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் சொரியாஸிஸ் நோயை கட்டுப்படுத்த உதவும். மேலும் மாதுளையின் மன அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையும் சொரியாஸிஸை கட்டுப்படுத்த உதவும்.
அடுத்தப்படியாக வாழைப்பழம் சாப்பிடலாம். பொதுவாக பழங்கள் அதிகமாக எடுத்துக் கொண்டால் தோல் வறட்சி குறையும். உணவில் மிளகுத்தூள் அதிகம் சேர்த்துக் கொள்வதும் சொரியாஸிஸ் நோய்க்கு சிறந்தது.
மேலும், கம்பு, சோளம், வரகு, பாகற்காய், நண்டு, மீன், இறால் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“