Advertisment

புளிப்பை தொடாதீங்க… மூட்டு வலியை விரட்டலாம்; சித்த மருத்துவர் சிவராமன்

முதலில் மூட்டு வலி வகைகள், என்ன மாதிரியான மூட்டு வலி என்பதை அறிந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர் சிவராமன் கூறினார்.

author-image
WebDesk
New Update
Joint pain Freepik

மூட்டு வலி பிரச்சனை மற்றும் அதை சரிசெய்வதற்கான  வழிமுறைகள், மூட்டு வலி வராமல் தடுப்பது அதற்கு ஏற்ற உணவு வகைகள் உள்ளிட்டவை குறித்து சித்த மருத்துவர் சிவராமன் 
விளக்கி உள்ளார்.

Advertisment

அவர் பேசிய யூடியூப் வீடியோவில், "மூட்டு வலி வயயோதிகத்தால் வருகிறது என்று பலர் நினைக்கின்றனர். அந்த காலத்தில் 60- 70 வயதில்  மூட்டு வலி  பிரச்சனை இருந்தது. இன்றைக்கு 30 வயதிலேயே குறிப்பாக பெண்களுக்கு மூட்டு வலி, இடுப்பு வலி, தோள் பட்டை வலி  போன்ற பிரச்சனைகள் அதிகம் வருகிறது. 

வயயோதிகத்தால் எலும்பு தேய்மானத்தால் வருவது ஒரு  மூட்டு வலி. மற்றொன்று உடலில் ரத்தத்தில் சீர் இல்லாமல் ஆட்டோ இம்யூன் பிரச்சனையால் வருவது ரொமட்டாஸ் ஆர்தேரெட்டிஸ் என்ற தீவிர மூட்டு வலி உள்ளது. 

இந்த ரொமட்டாஸ் ஆர்தேரெட்டிஸ் எலும்பு தேய்மானத்தால் வருவது அல்ல ரத்த அணுக்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வருவதாகும். என்ன வகையான மூட்டு வலி என்று அறிந்து அதற்கான சிகிச்சை, உணவு எடுக்க வேண்டும். 

உணவில் அதிகமாக புளிப்பு எடுத்துக் கொள்பவர்களுக்கு வயயோதிகத்தால் ஏற்படும் 
மூட்டு வலி வருகிறது. சாம்பார், புளிக் குழம்பு, மீன் குழம்பு போன்ற உணவுகளில் அதிகம் புளி சேர்த்துக் கொள்வது இதற்கு பிரச்சனையாகும். 

மற்றொன்று உடல் எடை அதிகமாக இருக்கும் போதும் மூட்டு வலி பிரச்சனை ஏற்படும். நடைபயிற்சி இல்லாதது,  சேரில் உட்கார்ந்து கொண்டு அதிக நேரம் வேலை பார்ப்பது போன்றவைகளும் மூட்டு வலி ஏற்பட காரணமாகும். மூட்டு வலி உள்ளவர்கள் சிகிச்சை மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. எண்ணெய் போடுவது, நிவாரணி பயன்படுத்துவது மட்டும் செய்ய கூடாது. உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். 

புளிப்பை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதிக மூட்டு வலி உள்ளவர்கள் 2-3 மாதம் புளியை முற்றிலுமாக தவிர்க்கலாம். அடுத்து தரைக்கு அடியில் விளையக் கூடிய கிழங்குகள் உருளை,  சேனை, சேப்பக்கிழங்கு போன்ற உணவுகள் ஜீரணத்தை தாமதப்படுத்தும். இதை தவிர்க்கலாம். அதே போல் குளிர்ச்சியான பொருட்கள் ஐஸ்கிரீம்,  நேரடியாக ப்ரிஜில் இருந்து எடுத்த பொருட்களையும் தவிர்க்கலாம்" என மருத்துவர் சிவராமன் கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment