காஸ்ட்லி மேட்டர்! பல வருடங்களுக்கு பட்டுப் புடவைகள் புத்தம் புதிதாக இருக்க இப்படி ஸ்டோர் பண்ணுங்க
புடவைகளை நீண்ட நாட்களுக்குத் துணி ஹேங்கரில் தொங்கவிடாதீர்கள். குறிப்பாக இரும்பினால் செய்யப்பட்ட ஹேங்கர்களைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை துருப்பிடித்து புடவைகளைக் கெடுத்துவிடும்.
புடவைகளை நீண்ட நாட்களுக்குத் துணி ஹேங்கரில் தொங்கவிடாதீர்கள். குறிப்பாக இரும்பினால் செய்யப்பட்ட ஹேங்கர்களைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை துருப்பிடித்து புடவைகளைக் கெடுத்துவிடும்.
silk saree maintenance saree storage tips how to store silk sarees
திருமணம் அல்லது விசேஷங்களுக்கு வாங்கிய விலை உயர்ந்த பட்டுப் புடவைகளை அலமாரியில் அப்படியே வைத்தால், அவை நிறம் மங்குவது, துர்நாற்றம் வீசுவது, மடிப்புப் பகுதியில் கிழிசல் ஏற்படுவது போன்ற பல பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றன.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், பட்டுப் புடவைகளைப் பல வருடங்களுக்குப் புத்தம் புதிதாக எப்படிப் பராமரிப்பது, அலமாரியில் எப்படிச் சேமிப்பது என்பதற்கான சில எளிய குறிப்புகளை இங்கே காணலாம்.
Advertisment
சுவாசிக்க விடுங்கள்!
முதலாவதாக, உங்கள் புடவைகளும் சுவாசிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இறுக்கமான, கடினமான பிளாஸ்டிக் கண்டெய்னரில் அவற்றைச் சேமிக்க வேண்டாம். இது புடவைகளை சுவாசிக்க விடாது. ஒருவேளை நீங்கள் பிளாஸ்டிக் கண்டெய்னரை பயன்படுத்த விரும்பினால், சற்று ஆழமான பெரிய கண்டெய்னரில் இரண்டு அல்லது மூன்று புடவைகளை மட்டும் வைப்பது நல்லது.
பருத்தித் துணி அல்லது பைகளில் சேமிக்கலாம்
Advertisment
Advertisements
புடவைகளை எப்போதும் பருத்தித் துணியில் சேமிப்பது மிகவும் சிறந்தது. இதற்கு நீங்கள் ரெடிமேடாகக் கிடைக்கும் மஸ்லின் துணிப் பைகள் அல்லது பழைய பருத்தித் துணிகளைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு புடவையையும் தனித்தனியாக ஒரு பையில் வைக்கலாம் அல்லது இரண்டு அல்லது மூன்று புடவைகளை ஒன்றாகப் பழைய, மென்மையான பருத்தித் துணியில் சுற்றி வைக்கலாம். இது புடவைகளைப் பாதுகாப்பாகவும் புத்தம் புதியதாகவும் வைத்திருக்க உதவும்.
அவ்வப்போது காற்றாட விடுங்கள்
விலையுயர்ந்த பட்டுப்புடவைகளை நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு ஒருமுறை அலமாரியிலிருந்து எடுத்து, முழுமையாக விரிக்காமல், மடிப்புகளை மட்டும் ஓரளவு தளர்த்தி காற்றாட விடுங்கள். இதைச் செய்வது புடவையில் இருக்கும் ஈரப்பதத்தைப் போக்கி, துர்நாற்றம் வராமல் தடுக்கும்.
அதேபோல், ஈரப்பதம் காரணமாகப் புடவைகளில் வெள்ளைப் பூஞ்சை உருவாகி துர்நாற்றத்தை உண்டாக்கும். போர்வைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை நீண்ட நாள் அலமாரியில் வைத்திருந்து எடுத்தால் ஒருவித வாசனை வரும், அதேபோன்றுதான் புடவைகளுக்கும்.
கடும் வெயிலில் வைப்பதைத் தவிர்த்து, மிதமான வெயிலில் அல்லது காற்றோட்டமான இடத்தில் புடவைகளைக் காற்றாட வைப்பது சிறந்தது.
நாப்தலின் உருண்டைகள், சிலிக்கான் ஜெல் பைகள்
அலமாரியின் ஈரப்பதத்தைத் தடுக்க நாப்தலின் உருண்டைகளைப் பயன்படுத்தலாம். ஆனால், நாப்தலின் உருண்டைகள் நேரடியாகப் புடவையின் மீது படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அவை புடவையின் நிறத்தைக் மங்கச்செய்யும் அல்லது கறைகளை ஏற்படுத்தலாம்.
நாப்தலின் உருண்டைகளை ஒரு துணியில் சுற்றி, அலமாரியின் ஒரு மூலையில் வைக்கலாம். நாப்தலின் உருண்டைகளுக்குப் பதிலாக ஈரப்பதத்தை உறிஞ்சக்கூடிய சிலிக்கான் ஜெல் பைகளையும் பயன்படுத்தலாம். இவை கறைகளை ஏற்படுத்தாது. மேலும், இவை புடவைகளின் அடுக்குகள் நடுவே எளிதாக வைக்கலாம்.
ஹேங்கர்களைப் பயன்படுத்தலாமா?
புடவைகளை நீண்ட நாட்களுக்குத் துணி ஹேங்கரில் தொங்கவிடாதீர்கள். குறிப்பாக இரும்பினால் செய்யப்பட்ட ஹேங்கர்களைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை துருப்பிடித்து புடவைகளைக் கெடுத்துவிடும். ஒருவேளை ஹேங்கர்களில் தொங்கவிடவேண்டிய அவசியம் ஏற்பட்டால், பிளாஸ்டிக் அல்லது மர ஹேங்கர்களைப் பயன்படுத்தலாம்.
காய்ந்த வேப்ப இலைகள்
அலமாரியின் துர்நாற்றத்தைத் தடுக்க, காய்ந்த வேப்ப இலைகளைப் பயன்படுத்தலாம். வேப்ப இலைகளைக் காயவைத்து, புடவைகளின் அடுக்குகளுக்கு இடையே வைக்கலாம். இது புடவைகளுக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் வாசனையைத் தரும். மேலும், பூச்சிகள் அண்டாமல் பாதுகாக்கும்.
மடிப்புகளை மாற்றி அமையுங்கள்
புடவைகளின் மடிப்புகளில் ஏற்படும் விரிசல் அல்லது சேதத்தைத் தவிர்க்க, அவ்வப்போது புடவைகளை எடுத்து அதன் மடிப்புகளை மாற்றி மாற்றி மடித்து வைப்பது நல்லது. இதன் மூலம் புடவைகள் நீண்ட நாட்களுக்குப் புதியது போலவே இருக்கும்.
இந்தக் குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் பட்டுப்புடவைகளைப் புத்தம் புதியது போல நீண்ட நாட்களுக்குப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.