கறுத்த வெள்ளி நகை புதுசு போல் மாறும்… டீ தூளில் இதை சேர்த்து கிளீன் பண்ணுங்க!

காற்றில் உள்ள கந்தக வாயுவும், நமது உடலில் சுரக்கும் எண்ணெய்களும் வெள்ளியுடன் வினைபுரிந்து சில்வர் சல்பைடு (Silver Sulfide) என்ற கருமையான படலத்தை உருவாக்குகின்றன.

காற்றில் உள்ள கந்தக வாயுவும், நமது உடலில் சுரக்கும் எண்ணெய்களும் வெள்ளியுடன் வினைபுரிந்து சில்வர் சல்பைடு (Silver Sulfide) என்ற கருமையான படலத்தை உருவாக்குகின்றன.

author-image
WebDesk
New Update
silver

Silver cleaning How to clean silver ware and jewel

வெள்ளி நகைகள் காலப்போக்கில் கருப்பாக மாறுவது இயற்கையான ஒரு நிகழ்வுதான். காற்றில் உள்ள கந்தக வாயுவும், நமது உடலில் சுரக்கும் எண்ணெய்களும் வெள்ளியுடன் வினைபுரிந்து சில்வர் சல்பைடு (Silver Sulfide) என்ற கருமையான படலத்தை உருவாக்குகின்றன. இதனால் வெள்ளி நகைகள் பொலிவிழந்து பழையதாகத் தோன்றலாம். ஆனால், கவலைப்படத் தேவையில்லை!

Advertisment

சில எளிய முறைகளைப் பயன்படுத்தி உங்கள் கறுத்த வெள்ளி நகைகளை மீண்டும் பளபளப்பாக மாற்ற முடியும். 

வெள்ளி நகைகளை வீட்டில் சுத்தம் செய்வது மிகவும் சுலபம். அதற்கு, முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உங்கள் வெள்ளி நகைகள் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றுங்கள்.

Advertisment
Advertisements

பிறகு, அந்தத் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், ஒரு டீஸ்பூன் டீத்தூள் சேர்க்கவும். தேயிலைத் தூள் தண்ணீரில் கலந்து நிறம் மாறியதும், அரை டீஸ்பூன் ஷாம்புவை ஊற்றி நன்றாகக் கலக்கி இரண்டு நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விடுங்கள்.

இப்போது, சுத்தம் செய்ய வேண்டிய வெள்ளி நகைகளை மெதுவாக அந்தக் கலவையில் போடுங்கள். எல்லா நகைகளும் தண்ணீரில் மூழ்கியிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நகைகளை மூன்று நிமிடங்களுக்குக் கொதிக்க விடுங்கள். பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். சூடான கலவையில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவைச் சேர்க்கவும். கலவை உடனடியாகப் பொங்கி வரும். பொங்குவது அடங்கியதும், அந்தக் கலவையை ஒரு கிண்ணத்தில் வடிகட்டி, நகைகளை மட்டும் தனியாக எடுக்கவும்.

வடிகட்டிய நீரில் நகைகளை மீண்டும் போட்டு மூன்று நிமிடம் ஊற விடுங்கள். பிறகு, நகைகளை எடுத்து ஒரு தட்டில் வையுங்கள். இப்போது, நகைகள் மீது அரை டீஸ்பூன் ஷாம்புவை தடவி ஒரு மென்மையான பிரஷ்ஷை பயன்படுத்தி நகைகளை நன்றாகத் தேய்க்கவும்.

தேய்த்த பிறகு, நகைகளைத் தண்ணீரில் நன்றாகக் கழுவுங்கள். இறுதியாக, சுத்தமான துணியால் நகைகளை மெதுவாகத் துடைத்து உலர வைக்கவும்.

இப்போது உங்கள் வெள்ளி நகைகள் பளிச்சென்று மின்னும்!

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: