வெள்ளி நகைகள்... மின்னும் அழகு! ஆனா கொஞ்ச நாள்ல அந்த பளபளப்பு மங்கிப் போனா மனசு கொஞ்சம் வருத்தப்படும்ல? கவலைப்பட வேண்டாம்! உங்க வீட்டுல இருக்கிற சில சிம்பிளான பொருட்களை வெச்சே உங்க வெள்ளி நகைகளை புதுசு மாதிரி ஜொலிக்க வைக்கலாம். நம்ப முடியலையா? இதோ பாருங்க எப்படின்னு:
Advertisment
என்னென்ன வேணும்?
கொஞ்சம் டூத்பேஸ்ட் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா கொஞ்சம் தண்ணி பழைய டூத் பிரஷ் (தூக்கிப் போடலாம்னு நினைச்சிருப்பீங்களே, இப்ப யூஸ் ஆகும்!) ஒரு சின்ன கிண்ணம் மென்மையான துணி
எப்படி பண்றதுன்னு பார்க்கலாமா?
Advertisment
Advertisements
முதல்ல ஒரு சின்ன மூடியில கொஞ்சமா டூத்பேஸ்ட்டை எடுத்துக்கோங்க. ரொம்ப அதிகமா எடுக்காதீங்க. அப்புறம் அதுகூட ஒரு ஸ்பூன் சமையல் சோடாவை போடுங்க. ரெண்டும் நல்லா சேரணும். இப்போ கொஞ்சமா தண்ணி ஊத்தி அந்த டூத் பிரஷ்ஷால நல்லா கலக்குங்க. ஒரு பேஸ்ட் மாதிரி வரும் அந்த பேஸ்ட் ரெடியானதும், உங்க வெள்ளி நகைகளை அந்த பிரஷ்ஷால மெதுவா தேயுங்க. அழுக்கு அதிகமா இருக்கிற இடத்துல கொஞ்சம் எக்ஸ்ட்ரா தேயுங்க. பொறுமையா தேச்சா பளபளன்னு ஆயிடும்!
நல்லா தேச்சி முடிச்சதும், ஒரு கிண்ணத்துல சுத்தமான தண்ணி எடுத்து நகைகளை அதுல போட்டு அலசுங்க. பேஸ்ட்டும் சோடாவும் சுத்தமா போயிடணும். கடைசியா ஒரு சுத்தமான துணியால அந்த நகைகளை ஈரம் இல்லாம தொடைச்சு எடுங்க.
இப்போ பாருங்க! உங்க வெள்ளி நகைகள் புதுசு மாதிரி ஜொலிக்கும்! இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணி உங்க வெள்ளி நகைகளோட அழகை எப்பவும் மெயின்டெயின் பண்ணுங்க! உங்க நகைகள் எப்பவும் மின்னும்!