பதினான்காவது நூற்றாண்டின் முற்பகுதி வரை கொரிய மக்களுக்கு என்று தனியாக எழுத்து வடிவம் இல்லை. வெறும் பேச்சு மொழி மட்டுமே இருந்தது. பேச்சு மொழியை எழுத்து வடிவில் எழுதிப் படிப்பதற்கு சீனர்களின் 'இடு (Yidu)'என்ற எழுத்து முறையைப் பயன்படுத்தினார்கள்.
Advertisment
பிறகு ஜோசன் எனும் ராஜவம்சத்தின் நான்காவது அரசரான மாமன்னர் சேஜோங் சாதாரண மக்களும் பயன்படுத்தக்கூடிய ஒரு எளிய மொழியை உருவாக்க முடிவு செய்தார். தன் அரசவை அறிஞர்களின் பல்லாண்டு கூட்டு ஆராய்ச்சியின் முடிவின் பயனாக கி.பி. 1446 ஆம் ஆண்டு 'ஹுன் மின் ஜோங் இம் (Hun Min Jeong Eum)’ என்ற கொரிய மொழி எழுத்துகளைக் கற்கும் வழிகாட்டிப் புத்தகத்தை வெளியிட்டார்.
இதன்பின் கொரியாவின் கல்வியறிவு மிகச்சிறந்த அளவில் முன்னேற்றம் அடைந்தது. இருப்பினும் 1970-க்குப் பிறகே முழு அளவில் இந்த மொழி பயன்பாட்டுக்கு வந்தது.
தமிழ் மொழியைப் போல் கொரிய மொழியிலும் உயிர், மெய் மற்றும் உயிர்மெய் எழுத்துகள் உள்ளன. கொரிய மொழியின் அடிப்படையான உயிர் எழுத்துகள் யின்-யாங் கொள்கையின்படி ஆகாயம், நிலம் மற்றும் மனிதன் என்ற மூன்று கூறுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழில் அடிப்படை மெய் எழுத்துகள் ஒலி எழுப்பும் நமது உறுப்புகளான 'நாக்கு, தொண்டை, வாய் மற்றும் பல்' ஆகியவை ஒலி எழுப்பும் அமைப்பின் படியும் உருவாக்கப்பட்டுள்ளது. தினத்தை தமிழில் 'நாள்' என்பது போல் கொரியமொழியிலும் ‘நால்’ என்றே உச்சரிக்கிறார்கள். இப்படி பல்வேறு சொற்களில் உள்ள ஒற்றுமைகளை இந்த வீடியோவில் காணலாம்.