நரை முடியை நிரந்தரமாக கருமையாக்கும்... இந்தப் பொடி கொஞ்சம் தடவிப் பாருங்க!

கூந்தலின் நிறத்திற்கு காரணமான மெலனின் என்ற கலர் பிக்மெண்ட் குறைவாக தயாராகும் போது, முடி வெண்மையாக மாறுகிறது. இதை சரி செய்வதற்கு ஒரு சூப்பரான வீட்டு வைத்தியம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

கூந்தலின் நிறத்திற்கு காரணமான மெலனின் என்ற கலர் பிக்மெண்ட் குறைவாக தயாராகும் போது, முடி வெண்மையாக மாறுகிறது. இதை சரி செய்வதற்கு ஒரு சூப்பரான வீட்டு வைத்தியம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

author-image
WebDesk
New Update
download (23)

இளநரை என்பது இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான இளையவர்களும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். இயல்பாக, வயதானவர்களுக்கு நரை முடி ஏற்படுவது சாதாரணமாக இருக்கிறது. ஆனால் 20 அல்லது 30 வயதுக்குள்ளேயே நரைமுடி காணப்படுவதை "ஆரம்பநிலை நரைமுடி" (premature greying) என்று குறிப்பிடுகிறோம். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம் — மரபணு (genetics), போஷாக்கு குறைபாடு (உதாரணமாக B12, இரும்புசத்து), மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள், மற்றும் அதிகமான கெமிக்கல் வைத்தியங்களை பயன்படுத்துவது போன்றவை.

Advertisment

குறிப்பாக, கூந்தலின் நிறத்திற்கு காரணமான மெலனின் என்ற கலர் பிக்மெண்ட் குறைவாக தயாராகும் போது, முடி வெண்மையாக மாறுகிறது. தவறான உணவு பழக்கங்கள், புகைபிடித்தல், மற்றும் சூரிய ஒளிக்கு அதிகமாக வெளியீடு ஆகியவையும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இது உடல்நலத்திற்கு கேடானதல்ல என்றாலும், அது மனச்சோர்வு மற்றும் தன்னம்பிக்கைக்கேடு ஏற்படுத்தக்கூடும். எனவே, ஆரம்பத்தில் இருந்தே சரியான உணவுமுறை, மன அமைதி, மற்றும் இயற்கை வைத்தியங்கள் மூலம் இதை கட்டுப்படுத்த முடியும்.

grey hair

இதை சரி செய்வதற்கு ஒரு சூப்பரான வீட்டு வைத்தியம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. அதற்க்கு முன் இதற்க்கு தேவையான பொருட்கள் பற்றி பார்க்கலாம். 

செம்பருத்தி

செம்பருத்தி என்பது நரை முடிக்கு சிறந்த இயற்கை வைத்தியம் ஆகும். அதில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் முடி வளர்ச்சியை ஊக்குவித்து, மெலனின் உற்பத்தியை அதிகரித்து நரை முடியை தடுக்கும். செம்பருத்தி பூ மற்றும் இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைத்து, வாரம் 2 முறை தலைமுடிக்கு மசாஜ் செய்தால் முடி வலுவாகி, நரை முடி குறையும்.

Advertisment
Advertisements

hibiscus

கருப்பு எள்ளு

கருப்பு எள்ளு முடி கருமையை தாமதப்படுத்தும் இயற்கையான மூலிகை ஆகும். இது முடி ஊட்டச்சத்துக்களை வழங்கி, முடி உதிர்வை குறைத்து, முடி வலிமையையும் நிறத்தையும் மேம்படுத்த உதவுகிறது. தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தினால், முடி ஆரோக்கியம் மேலும் அதிகரிக்கும்.

black sesame

கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி என்பது நரை முடி தடுக்கும் இயற்கை மூலிகை. இது முடி வலுப்படுத்தி, துளியும் நரைமுடியும் குறைக்க உதவுகிறது. எண்ணெய் அல்லது பொடி வடிவில் தொடர்ந்து பயன்படுத்தினால், நரை முடி தடுப்பதில் இது உதவும். 

karisala

நெல்லிக்காய்

நெல்லிக்காய் என்பது நரை முடியை தடுக்கும் சிறந்த இயற்கை மூலிகை. இதில் உள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முடி வலுப்படுத்தி, மெலனின் உற்பத்தியை அதிகரித்து முடி வெண்மை பிரச்சனையை குறைக்க உதவும். நெல்லிக்காய் எண்ணெய் அல்லது பேஸ்ட் முறையில் பயன்படுத்தினால் நரைமுடி குறையும். 

amla

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் இயற்கையான முறையில் முடி கருமையை தாமதப்படுத்த உதவுகிறது. இது முடியை ஊட்டி, முடி உதிர்வைக் குறைக்கிறது மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தொடர்ந்து பயன்படுத்தினால், முடி நன்றாக வளர்ந்து, கருமை குறையும்.

coconut oil

செய்முறை

இப்போது முதலில் ஒரு இரும்பு கடாயில் முதலில் 250  மிலி தேங்காய் எண்ணெய் எடுத்து சூடானதும் அதில் அணைத்து பொடிகளையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு அது ஆறுவதற்கு அதே இரும்பு பாத்திரத்தில் குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு அப்படியே விட வேண்டும். 

இதை 6 மாதம் வரை கெடாமல் இருக்கும். வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால் போதும், கண்டிப்பாக இரண்டு வாரத்தில் வித்தியாசம் தெரியும். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: