தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி கோழி குழம்பை சமைப்பார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் இருக்கும். காரைக்குடி, செட்டிநாடு, தூத்துக்குடி, கோயம்புத்தூர் ஸ்டைல், அரைத்த மசாலா கோழி குழம்பு, வறுத்த கோழி குழம்பு இப்படி ஒரு நீண்ட லிஸ்டே இருக்கு. அதிலையும் நாட்டுக் கோழி ஸ்டைலில் வைக்கப்படும் கோழிக் குழம்புக்கு ஆசைப்படாதவர்களே இருக்க மாட்டார்கள்.
ஆனால் பெரும்பாலான நேரத்தில் கோழி குழம்பு கொதிக்கும் போது மணமான மசாலா வாசனை வரவது இல்லை என்று பெரும்பாலான இல்லத்தரசிகள் புலம்புவது உண்டு. அதற்கு காரணமே அவர்கள் செய்யும் இந்த சிறிய தவறு தான். பெரும்பாலான வீடுகளில் கொழி குழம்பு செய்யும் போது கொத்தமல்லி சேர்ப்பதை தவிர்த்து விடுவார்கள்.
அசைவை உணவை பொருத்தவரையில் அது குழம்போ, தொக்கோ, வறுவலோ சமைத்து இறக்கும் நேரத்தில் சிறிதளவு கொத்தமல்லியை கட்டாயம் தூவ வேண்டும். அப்படி தூவினால் வாசனை வீட்டையே மணக்கும்.
சமையல் குறிப்புகள்:
1. உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் போது, நறுக்கிய வில்லைகளின் மேல் சிறிது பயத்தம் மாவு தூவிவிட்டுப் பொரித்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.
2. வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.
3. அடைக்கு ஊறவைக்கும் அரிசி, பருப்புடன் சிறிது கொண்டைக் கடலையையும் ஊறவைத்து, அரைத்து அடை செய்தால் ருசியாக இருக்கும்.
4. குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.
5. தேங்காயை சரிபாதியாக உடைக்கும் முன்பு தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.
6. காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்