மீன் குழம்பு அசைவ சமையலில் முக்கியமானது. அசைவ பிரியர்களுக்கு மீன் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். ஏனெனில் இதில் உள்ள ஒமேகா அமிலம் வேறு எந்த மாமிசத்திலும் கிடையாது. கூடவே மீன் நல்ல கொழுப்புச் சத்தும் உடையது.
வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. இப்படி பார்த்து பார்த்து சாப்பிடும் மீன் குழம்பு ரொம்ப ரொம்ப டேஸ்ட்டாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? வெந்தயத்தை பொடியாக்கி குழம்பு கொதிக்கும் போது தூவ வேண்டும். இப்படி தூவினால் குழம்பு மணக்கும். அதோடு சுவையும் கூடும்.
சமையல் குறிப்புகள்:
`1. வடை, பக்கோடா செய்யும்போது, ஒரு தேக்கரண்டி ரவை கலந்து செய்தால், பக்கோடா மொறுமொறுப்பாக இருக்கும்.
2. ரவா தோசை செய்யும்போது 2 தேக்கரண்டி சோளமாவு சேர்த்து செய்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென்று இருப்பதோடு, உடம்பிற்கு நல்லது.
3. இரவில் பால் சாப்பிடும் பழக்கம் இருந்தால், பாலில் 6 பூண்டுப் பற்களை போட்டுக்காய்ச்சி சாப்பிட்டால், கொலாஸ்ட்ரல் பிரச்சினையே வராது.
4. நெய் காய்ச்சும்போது, சிறிதளவு உப்பு சேர்த்துக் காய்ச்சினால், நெய் வாசனையாக இருப்பதோடு, நீண்ட நாள் கெடாமலும் இருக்கும்.
5. மோர்க் குழம்பு செய்யும்போது, சிறிதளவு ஓமத்தை அரைத்துவிட்டால், குழம்பு ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
6. சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
7. முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்றவைகளை வேக வைக்கும் பொழுது ஒரு சொட்டு எலுமிச்சை சாறு ஊத்தி வேக வைத்தால் வேண்டாத வாசம் போய் விடு